உருவாகும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்- இயக்குனர் மோகன் ராஜா கொடுத்த அப்டேட்
தனி ஒருவன் திரைப்படத்தை தொடர்ந்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி, அசின், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் நதியாவிற்கு இப்படம் கம்பேக் படமாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாகவும், இந்த படத்தை தான் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், படத்தின் முதல் பாகத்தில் நதியாவின் கதாபாத்திரம் இறந்ததைப் போல் வடிவமைக்கப்பட்டிருக்கும், அதனால் அந்த கதாபாத்திரம் இரண்டாவது பாகத்தில் தொடராது எனவும் குறிப்பிட்டார்.
திரைக்கு வர காத்திருக்கும் ஜெயம் ரவியின் 7 படங்கள்
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி இரண்டாம் பாகம் அறிவிப்புக்கு பின்னர், நடிகர் ஜெயம் ரவி கைவசம் ஏழு திரைப்படங்களை வைத்துள்ளார். சைரன், பிரதர், ஜீனி, தக் லைஃப், ஜெயம் ரவி 33, ஜனகனமன, தனி ஒருவன் 2 என அவரின் அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது. அண்ணன்- தம்பியான இயக்குனர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில், ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், தில்லாலங்கடி உள்ளிட்ட பல வெற்றி படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.