
மார்க் ஆண்டனி பட விவகாரம்: மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்
செய்தி முன்னோட்டம்
மார்க் ஆண்டனி திரைப்படத்தை தணிக்கை செய்ய அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில், மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜரானார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் தணிக்கை செய்ய, தணிக்கை அதிகாரிகள் தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்றதாக, நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக நடிகர் விஷால் மற்றும் அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணனுக்கு சம்மன் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
"சிபிஐ அலுவலகத்திற்கு செல்வேன் என நினைத்துப் பார்க்கவில்லை" - நடிகர் விஷால்
Now on my way to CBI office in Mumbai for an enquiry regarding the CBFC case. Lol. Never ever thought I will be going to this office too in my life.
— Vishal (@VishalKOfficial) November 28, 2023