
"எனக்கு பிடித்த தமிழ் படங்கள் இவைதான்": பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டின் இளம்நடிகர் ரன்பிர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அனிமல்'.
இப்படத்தில் நாயகியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படத்தில் மேலும், பாபி தியோல் மற்றும் அணில் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 1 திரைக்கு வரவுள்ள இந்த திரைப்படம், தந்தை-மகனின் உறவை பற்றி பேசும் படம் என கூறப்படுகிறது.
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இன்று (நவம்பர் 26) படக்குழுவினர் சென்னை வந்திருந்தனர்.
அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினர்.
அப்போது ரன்பிர் கபூர், தமிழில் வெளியான படங்களில், தன்னை மிகவும் கவர்ந்தாக திரைப்படங்கள், விக்ரம், ஜெயிலர் மற்றும் லியோ என தெரிவித்தார்.
துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் தான் இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை இயக்கியுள்ளார் எனவும் சிலாகித்தார் ரன்பிர் கபூர்.
ட்விட்டர் அஞ்சல்
"எனக்கு பிடித்த தமிழ் படங்கள் இவைதான்"
#RanbirKapoor at Chennai #Animal press meet;
— Ramesh Bala (@rameshlaus) November 26, 2023
" #Jailer , #Leo and #Vikram are 3 of my favorite Tamil films in the last one and half years.. "