
பிரதீப் ஆண்டனியின் ரசிகன் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக நடிகை வனிதா புகார்
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ்-இன் ஏழாவது சீசன் தற்போது நடந்து வருகிறது.
இதில் வளர்ந்து வரும் நடிகரான பிரதீப் ஆண்டனி மீது பாலியல் குற்றசாட்டு சுமத்தப்பட்டு, ரெட் கார்டு தரப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் பல கருத்துகள் கூறிய நிலையில், நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகருமான நடிகை வனிதா, பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது சரியே என கூறி இருந்தார்.
இதற்கு பிரதீப் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு நடிகை வனிதா விஜயகுமாரை மீது பிரதீப்பின் ரசிகர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது, தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகை வனிதா மீது தாக்குதல்
Brutally attacked by god knows who ! A so called #PradeepAntony supporter. Finished my #BiggBossTamil7 review and had dinner and walked down to my car i parked in my sister sowmyas house was dark and a man appeared from nowhere and said red card kudukreengala
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023
card 2
நடிகை வனிதா மீது தாக்குதல்
நேற்றிரவு தன்னுடைய ரெவியூக்கான ஷூட்டிங்கை முடித்துவிட்டு, கார்-ஐ எடுக்க சென்றபோது, அங்கே மறைந்திருந்த நபர், தான் 'பிரதீப்பின் ரசிகன்' என கூறிக்கொண்டு, எப்படி ரெட் கார்டு கொடுத்தது சரி எனக்கூறலாம் என சொல்லி வனிதாவை மூர்க்கத்தனமாக தாக்கியதாக கூறியுள்ளார்.
அந்த இடம் இருட்டாக இருந்ததாலும், அது ஒரு பழைய கட்டிடம் என்பதனால், CCTV வசதிகள் இல்லை என்பதாலும், தாக்குதல் நடத்தியவரை வனிதாவால் அடையாளம் காண முடியவில்லை எனவும் அந்த பதிவில் கூறியுள்ளார்.
மேலும், வலியாலும், அதிக ரத்தபோக்காலும் தான் பாதிக்கப்பட்டதால், தன்னுடைய சகோதரியின் உதவியுடன் முதலுதவி செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்றும், காரணம், தனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை போய் விட்டது என்றும் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
வனிதாவின் பதிவு
I thank everyone for your care and support so many calls and messages. I feel loved thank you, it was dark and I hardly could see anything its an old building and no proper security system in place. But taking necessary action. One request to few don’t spread hate .. spread love
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023
ட்விட்டர் அஞ்சல்
காயங்களுடன் கூடிய தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்ட வனிதா
Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023