பருத்திவீரன் விவகாரம்: இயக்குனர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குனர் சசிகுமார், சமுத்திரக்கனி
செய்தி முன்னோட்டம்
'பருத்தி வீரன்' பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் மீது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், நேற்றிரவு அமீர் அறிக்கை ஒன்றினை தனது சமூகவலைத்தள பக்கம் மூலமாக வெளியிட்டிருந்தார்.
அதில் "பருத்திவீரன்' பட விவகாரத்தில் என்னை பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியது உண்மைக்கு புறம்பானவை என்றும், வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுபற்றி மேலும் எதுவும் பேசமுடியாத சூழல் என்றும் தெரிவித்திருந்தார்.
அதோடு, இந்த விவகாரம் பற்றி உண்மை அறிந்தவர்களும், படத்தில் பங்காற்றியவர்களும் இது குறித்து மௌனம் காப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார் அமீர்.
"இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே" என்று அமீர் தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமீரின் பதில்
#பருத்திவீரன் படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தார் இயக்குநர் அமீர்!#Paruthiveeran #ameer #gnanavelraja #karthi #Suriya pic.twitter.com/BupkxWRhLb
— Top Tamil News (@toptamilnews) November 24, 2023
card 2
அமீருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சமுத்திரக்கனி, சசிகுமார்
இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார், அமீருக்கு ஆதரவாக பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில்," அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். 'பருத்திவீரன்' இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை" என்று குறிபிட்டிருக்கிறார்.
அதேபோல சமுத்திரக்கனியும்," அமீர் அன்னான் பத்தி நீங்க பேசின வீடியோவை இப்போதான் பாத்தேன் ப்ரோ.. ரொம்ப ரொம்ப தப்பு பணித்திருக்கீங்க ப்ரோ..தப்பு தப்பா பேசியிருக்கீங்க..அல்மோஸ்ட் 50 -60 பேர் சேர்ந்து காசு கொடுத்துதான் இந்த படத்தை முடிச்சோம். கடைசில நீங்க தயாரிப்பாளர் சட்டையை போட்டுக்கிட்டிங்க..தயாரிப்பாளர் பதவியை அமீர் அன்னான் உங்களுக்கு விட்டுக்கொடுத்தார்" என காட்டமாக பேசியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சசிகுமாரின் பதிவு
#Ameer#TANTIS #இயக்குனர்கள்சங்கம் #RKSelvamani #RVUdhayakumar pic.twitter.com/74jPCXTUJS
— M.Sasikumar (@SasikumarDir) November 25, 2023