Page Loader
45 ஆண்டுகால நட்பு: படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்ட ரஜினி-கமல் 
45 ஆண்டுகால நட்பு: படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்ட ரஜினி-கமல்

45 ஆண்டுகால நட்பு: படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்ட ரஜினி-கமல் 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 23, 2023
06:20 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிக்கொண்டிருக்கும் உச்ச நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும். இயக்குனர் பாலச்சந்தரின் பாசறையிலிருந்து வந்த முத்துக்கள் இருவரும் என பலரும் கூறுவதுண்டு. அந்த பாசறையில் தொடங்கிய நட்பு, இந்த இருவருக்குள்ளும் 45 ஆண்டுகளாக ஆழமாக, அழகாக, விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இவர்களின் நட்பை பற்றி சினிமா உலகில் சிலாகிக்காதவர்கள் இருக்க முடியாது என்றே கூறலாம். இந்த நிலையில், இன்று இவர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்ட தருணம் ஒன்று அமைந்தது. சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோஸ்-இல் ஒருபுறம் கமல்ஹாசன், தன்னுடைய 'இந்தியன் 2' படப்பிடிற்காகவும், மறுபுறம் ரஜினிகாந்த் தன்னுடைய 'தலைவர் 170' படத்திற்காகவும் ஒரே அரங்கில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

card 2

நண்பனுக்கு சர்ப்ரைஸ் அளித்த கமல்

கமல்ஹாசன் அதே ஷூட்டிங் தளத்தில் இருப்பதை அறிந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அவரை காண வரலாமா என கேட்டுள்ளார். இதனை அறிந்த கமல்ஹாசனோ, நண்பனை காண தானே நேரில் செல்ல முடிவெடுத்து, இன்று அதிகாலை 8 மணிக்கு, ரஜினிகாந்த் படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குக்கே சென்று, ரஜினிக்கு சர்ப்ரைஸ் அளித்தாராம். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படம், நீளம் காரணமாக இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. அதனால் இன்னும் கொஞ்ச நாட்கள் அப்படத்திற்கு ஷூட்டிங் நடைபெறும் என செய்திகள் தெரிவிக்கின்றன. மறுபுறம், ரஜினியின், 'தலைவர் 170' ஷூட்டிங் கேரளா, மற்றும் மும்பையில் முடிவடைந்து விட்டது. இன்னும் சில காட்சிகள் சென்னையில் படமெடுக்கவிருக்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்ட ரஜினி-கமல்