அடுத்த செய்திக் கட்டுரை

மணிப்பூர் மாடல் அழகியை மணக்கவிருக்கும் ரந்தீப் ஹூடா
எழுதியவர்
Venkatalakshmi V
Nov 25, 2023
05:21 pm
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரந்தீப் ஹூடா. பாகிஸ்தான் சிறையில், இந்திய உளவாளி என சிறையிலடைக்கப்பட்ட சரப்ஜீத் சிங்-கின் கதையை திரைப்படமாகிய போது, அதில் சரப்ஜீத் சிங் கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளை வென்றவர் ரந்தீப்.
அதேபோல ஹைவே, சுல்தான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது, தன்னுடைய நீண்ட நாள் காதலியான, லின் லைஷ்ராம் என்பவரை திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவர்,"அர்ஜுனன், மணிப்பூரின் வீர இளவரசி சித்ரங்கதாவை மணந்தததை போல, எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆசியுடன் நாங்கள் திருமணம் செய்து கொள்கிறோம் என்று பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்...காதல் மற்றும் ஒளியில், லின் மற்றும் ரன்தீப்."
செய்தி இத்துடன் முடிவடைந்தது