Page Loader
இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள நடிகை சமந்தா
சமந்தா விரைவில், 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள நடிகை சமந்தா

எழுதியவர் Srinath r
Nov 27, 2023
03:36 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2021 ஆம் ஆண்டு தன் கணவரை பிரிந்தார். இந்நிலையில், தற்போது இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு, குழந்தைகளை வளர்க்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2nd card

இரண்டாவது திருமணத்தில் ஆர்வம் இல்லை

தற்போது 36 வயதாகும் சமந்தா, மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் அவருக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது. எனினும், திருமணம் செய்ய ஆர்வமில்லை என சமந்தா மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமந்தாவின் இந்த முடிவு, அவர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது, ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்து, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். ஆயுர்வேத சிகிச்சை எடுக்க, அவர் அண்மையில் பூட்டான் சென்றதாக கூறப்படுகிறது.