நவம்பர் 30-இல் துருவ நட்சத்திரம் வெளியாகிறதா?
'துருவநட்சத்திரம்' திரைப்படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியாகவிருந்தது. கௌதம் மேனன் இயக்கி, தயாரித்த இந்த திரைப்படம் கடைசி நிமிட சட்ட சிக்கலில் சிக்கி, மறுவெளியீட்டு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக 'ஆல் இன் பிக்ச்சர்ஸ்' என்ற நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய 2 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதால், அதை செட்டில் செய்த பிறகு, படத்தை வெளியிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனிடையே, விரைவில் அந்த பணத்தை தந்துவிடுவதாக நீதிமன்றத்தில் கௌதம் மேனன் வாக்குறுதி அளித்ததாகவும் கூறப்பட்டது. அதேநேரத்தில், படத்துக்கான முன்பதிவு தொடங்கப்படவில்லை. அதோடு, படத்தை வாங்க எந்த விநியோகஸ்தரும் முன் வரவில்லை எனவும் கூறப்பட்டது. இத்தனை பிரச்னைகளையும் கடந்து, வரும் நவம்பர்30 துருவநட்சத்திரம் திரைக்கு வருமென தற்போது செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.