
நடிகர் சூர்யா, வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை
செய்தி முன்னோட்டம்
நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் 'கங்குவா' படப்பிடிப்பு தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டது.
அதில், சூர்யாவின் தோள்பட்டையின் மீது ரோப் கேமரா அறுந்து விழுந்தது என கூறப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சூர்யா, அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
எனினும் மருத்துவர்கள் அறிவுரைப்படி, இன்னும் 2 வாரங்கள் அவர் வீட்டில் ஓய்வு எடுக்கப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும், அவர் உள்ளதாக காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், ஷூட்டிங் தொடர்ந்து நடைபெறும் என தயாரிப்பு தரப்பு கூறியதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும், கங்குவா திரைப்படத்தின் சண்டை காட்சிகள், EVP பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வந்தபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் சூர்யா, வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை
#CinemaUpdate | மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 2 வாரம் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க நடிகர் சூர்யா முடிவு!#SunNews | #Suriya | #Kanguva pic.twitter.com/Hxhab4n2IM
— Sun News (@sunnewstamil) November 26, 2023