தொடங்கப்படாத புக்கிங்: துருவநட்சத்திரம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
நிலுவைத் தொகை பிரச்சனையில் சிக்கி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவதற்கு, இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாததால் படம் வெளியாவது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 7 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம், நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கமாக தமிழ் திரைப்படங்களுக்கு, திரைப்படம் வெளியாவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு தொடங்கி விடும் நிலையில், துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு இன்னும் தொடங்கப்படவில்லை.
மேலும், நேற்று பெங்களூரில் தொடங்கிய டிக்கெட் முன்பதிவு, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2nd card
விற்கப்படாத தமிழ்நாடு விநியோகஸ்த உரிமை
படத்தை தமிழ்நாட்டில் வெளியிட எந்த ஒரு விநியோகஸ்தரும் முன் வராததால், படத்தின் புக்கிங் தொடங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமையும் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என தெரிகிறது.
நேற்று வரை, போஸ்டர் வெளியிட்டு ப்ரமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வந்த படக் குழுவினர், தற்போது எந்த போஸ்டரையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், படம் தொடர்பாக ₹80 கோடி நிலுவைத் தொகை உள்ளதாகவும், இது குறித்த வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த சம்பவங்கள், படம் நாளை வெளியாவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை உறுதிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
3rd card
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ₹2.40 கோடி கொடுக்க உத்தரவு
துருவ நட்சத்திரம் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ள நிலையில், தற்போது 'ஆல் இன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு நாளை காலை 10:00 மணிக்குள், ₹2.40 கோடியை, திரைப்படத்தின் இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் கொடுத்தால் மட்டுமே, திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிலம்பரசனை வைத்து சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்குவதற்காக, ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம், அட்வான்ஸ் ஆக பெற்ற தொகையை தற்போது திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.