
'ஜிகர்தண்டா டபுள் X' திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்
செய்தி முன்னோட்டம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், S.Jசூர்யா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுவரும் திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் X'.
பல பிரபலங்களும் இப்படத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும்நிலையில், இன்று(நவ.,15)நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் காட்டுவாசி மக்களாக நடித்த நடிகர்களை பாராட்டி பேசியதோடு தனது நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.
இதனிடையே பேசிய ராகவா லாரன்ஸ்,"படத்தில் இந்த அரக்கன் கூட சேர்ந்து நடிக்குறதுக்குள்ள எனக்கு போதும்போதும்னு ஆயிடுச்சு"என்று எஸ்.ஜே.சூர்யாவை குறிப்பிட்டு ஓப்பனாக பேசியுள்ளார்.
மேலும் இதில் காட்டுவாசிகளாக நடித்துள்ள தாண்டிக்குடி ஊர்மக்களும் தங்கள் நன்றிகளையும் அனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த கலகலப்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
செய்தியாளர் சந்திப்பு
"இந்த அரக்கன் கூட சேர்ந்து நடிக்கிறதுக்குள்ள எனக்கு உயிரே போயிடுச்சு.." ஓபனாக போட்டுடைத்த ராகவா லாரன்ஸ் #madurai #jigarthanda2 #raghavalawrence #sjsurya #ThanthiTV pic.twitter.com/tLsXZ5L9kt
— Thanthi TV (@ThanthiTV) November 15, 2023