
ஜனவரி 12ல் வெளியாகும் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப்பின் 'மெரி கிறிஸ்மஸ்' திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை எக்ஸ் தளம் வாயிலாக அறிவித்த படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தௌராணி, "காத்திருப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. உங்கள் குளிர்காலத்தை சிறப்பாக ஜனவரி 12ஆம் தேதி மெரி கிறிஸ்மஸ் வெளியாகிறது" என பதிவிட்டுள்ளார்.
திரில்லர் படமாக உருவாகியுள்ள மெரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில், சஞ்சய் கபூர், டின்னு ஆனந்த், ராதிகா ஆப்தே, வினய் பதக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பொங்கலுக்கு வெளியாகும் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம்
The wait is almost over! #MerryChristmas is making your winter merrier on January 12, 2024.
— Ramesh Taurani (@RameshTaurani) November 16, 2023
⁰#SriramRaghavan @TipsFilmsInd #MatchboxPictures @RameshTaurani #SanjayRoutray #JayaTaurani #KewalGarg #KatrinaKaif @VijaySethuOffl #SanjayKapoor #VinayPathak #TinnuAnand #RadhikaApte pic.twitter.com/JOty5iV1Sl
3rd card
2024 ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தமிழ் படங்கள்
தமிழில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தற்போது வரை 5 திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினிகாந்த் எக்ஸ்டெண்டெட் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம்,
சுந்தர் சி இயக்கி, நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம், ரவிக்குமார்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள அயலான், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்மஸ் ஆகிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.