Page Loader
'தூம்' படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார்
'தேரே லியே'(2000) திரைப்படத்தின் மூலம் சஞ்சய் காத்வி இயக்குனராக அறிமுகமானார்.

'தூம்' படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார்

எழுதியவர் Srinath r
Nov 20, 2023
11:16 am

செய்தி முன்னோட்டம்

தூம் படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை மாரடைப்பால் உயிர் இழந்ததாக, அவரது மகள் சஞ்சனா தெரிவித்தார். அவருக்கு வயது 56. அடுத்த மூன்று நாட்களில் தனது 57வது பிறந்தநாளை கொண்டாட இருந்த சஞ்சய், யாஷ் ராஜ் பிலிம்ஸின் தயாரித்த "தூம்" சீரிஸ் -- "தூம்" (2004) மற்றும் "தூம் 2" (2006) திரைப்படங்களுக்காக அறியப்பட்டவர். "காலை 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் காலமானார். இறப்பிற்கான காரணம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை," "ஆனால் இது பெரும்பாலும் மாரடைப்பாக இருக்கலாம். அவர் உடல்நிலை நன்றாக இருந்தது, அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்தார்" என்று சஞ்சனா பிடிஐயிடம் கூறினார். சஞ்சய்க்கு திரைத்துறையினர், ரசிகர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

சஞ்சய்க்கு இரங்கல் தெரிவித்துள்ள யாஷ் ராஜ் பிலிம்ஸ்