தீர்க்கப்படாத நீதி சிக்கலால் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போகும் அபாயம்
செய்தி முன்னோட்டம்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில்,திரைப்படத்தைச் சுற்றி எழுந்துள்ள நிதி சார்ந்த சிக்கல்களால், ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 7 வருடத்திற்கு முன் அறிவிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படம், பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு இடையே, நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், படம் தொடர்பான சில நிதி சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை எனவும், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அதை தீர்ப்பதற்காக போராடி வருவதாகவும் தகவல் வெளியாகிள்ளது.
தற்போது, நவம்பர் 24ஆம் தேதிக்கும் முன்னர் பிரச்சனைகள் தீர்க்கப்படாத பட்சத்தில், படம் வெளியீடு மீண்டும் தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
துருவ நட்சத்திரம் வெளியீடு தள்ளிப் போகும் அபாயம்
BREAKING:
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 20, 2023
High Chances GVM - Chiyaan’s #DhruvaNatchathiram release to get postponed from Nov 24. Financial issues yet to be resolved☹️ pic.twitter.com/TeWWbkGJC2