பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு நன்றி தெரிவித்த கமல்
செய்தி முன்னோட்டம்
கமல்ஹாசனுக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பாடல் மூலமாக வாழ்த்து கூறிய நிலையில், வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கமலஹாசன், அவரது உடல் நிலையை கவனிக்க வலியுறுத்தியுள்ளார்.
நவம்பர் 7ஆம் தேதி அன்று உலகநாயகன் கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க, பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பாடல் ஒன்றை தயாரித்துள்ளார்.
அந்தப் பாடலை கமல்ஹாசனிடம் சேர்க்க பெரும் முயற்சி மேற்கொண்டு நிலையில் அவரால் முடியாமல் போனது. இந்நிலையில், இயக்குனர்-நடிகரான ராதாகிருஷ்ணன் பார்த்திபனிடம் உதவி கோரியுள்ளார்.
பார்த்திபன் அப்பாடலை கமலஹாசனுக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் அந்த பாடலை கேட்டு, குரல் செய்தி மூலம் அல்போன்ஸ் புத்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2nd card
உடல்நிலை கவனித்துக் கொள்ள அறிவுறுத்திய கமலஹாசன்
கமல்ஹாசனின் நன்றி செய்தியில், தான் அல்போன்ஸ் புத்திரனின் பாட்டை கேட்டதாகவும், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், மனநிலை நன்றாக இருப்பதாகவும், அவர் எடுக்கும் முடிவு அவருடையதாக இருந்தாலும் கூட, உடல் நிலையை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்ட கமல்ஹாசன் 'டேக் கேர்' என கூறியுள்ளார்.
அல்போன்ஸ் புத்திரன், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இவர் அடுத்து இயக்கிய பிரேமம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், சில தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம், தான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சினிமாவை விட்டு விலகுவதாகவும் பதிவிட்டு இருந்தார். பின்னர், இப்பதிவை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
அல்போன்ஸ் புத்திரனுக்கு உதவிய ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
பெரிதோ சிறிதோ விருதே கிடைத்தாலும்,என் பிறந்த நாள் பரிசாக நான் நினைப்பது இக்குரலை தான்….
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 16, 2023
கேட்கும் மாத்திரத்தில் புரியாது….
புதிய பாதைக்கு முன் நாகரீகமாக யாசகமே பலரிடம் கேட்டிருக்கிறேன்.அதன் பின் அருள் பாவிக்கும் ரசிகர்களாகிய உங்களின் ஆதரவால் நான் யாரிடமும் எனக்காக எதையும்… pic.twitter.com/INYEj3f8UY