இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் 80களில் புகழ்பெற்ற நடிகை ராதாவின் மகளும், நடிகையுமான கார்த்திகா நாயர், தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு, நாகச்சைதன்யா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான கார்த்திகா, கடந்த 2011 ஆம் ஆண்டு, இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கிய கோ திரைப்படம் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார்.
இப்படம் மாபெரும் வெற்றியடைந்த போதும், சினிமா இவருக்கு கை கொடுக்கவில்லை.
அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் கார்த்திகா நடித்த போதிலும், தற்போது வரை 9 திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான, புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படம் இவரின் கடைசி படமாக அமைந்தது.
2nd card
இன்று காதலனை கரம் பிடிக்கும் கார்த்தி நாயர்
திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஆரிய- திராவிட மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஆரம்ப்-கஹானி தேவசேனா கி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
இத்தொடர், விமர்சன ரீதியாக வெற்றி பெறாத நிலையில் முதல் சீசன் உடன் கைவிடப்பட்டது.
அதன்பின்னர், தன்னுடைய தந்தையின் ஹோட்டல் பிசினஸ்-ஐ மேற்பார்வை செய்து வந்த கார்த்திகாவிற்கு, கடந்த அக்டோபர் மாதம், இவரின் காதலரான ரோஹித் மேனன் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் வைரலாக நிலையில், திருமணம் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது.
இந்த நிலையில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக, அவரின் திருமணம் இன்று திருமணம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, தன் வருங்கால கணவருடன், அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.