ஹரிஷ் கல்யாண்- எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ள பார்க்கிங் படத்தின் ட்ரெய்லர் வெளியானது
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ள பார்க்கிங் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அரசு ஊழியரான எம்எஸ் பாஸ்கர், அவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கும் ஹரிஷ் கல்யாண் இடையே, கார் நிறுத்தும் 'பார்க்கிங்' இடத்திற்காக நடைபெறும் ஈகோ யுத்தமே படத்தின் கதை. மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களின் பாணியில், இப்படம் க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது. இந்துஜா ரவிச்சந்திரன் படத்தின் நாயகியாக நடித்துள்ள நிலையில், சாம் சிஎஸ் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பார்க்கிங் திரைப்படத்தை, ரிவால்வர் ரீட்டா, உள்ளிட்ட படங்களை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.