விரைவில் ஓடிடியில் வெளியாகும் ஜப்பான் திரைப்படம்?
இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு, கடந்த நவம்பர் 10 ஆம் தேதி ஜப்பான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கார்த்தியின் 25வது படமான ஜப்பான் திரைப்படத்தில், கொள்ளையனாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படம் தமிழ்நாட்டில் நடந்த சில உண்மையான கொள்ளை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. படத்தின் நாயகியாக அனு இம்மானுவேல் நடித்திருந்தார். மேலும் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் சர்தார் திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் ஜப்பான் திரைப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான ஜப்பான் திரைப்படம், எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என கூறப்படுகிறது.
நெட்பிலிக்ஸ்ல் வெளியாகும் ஜப்பான்
படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், திரையரங்குகளில் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், திரையரங்குகள் ஜப்பான் திரைப்படத்திற்கு பதிலாக, ஜிகர்தண்டா டபுள்X மற்றும் லியோ திரைப்படங்களுக்கு மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பட குழுவினர் ஜப்பான் திரைப்படத்தை விரைவில், ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியாகும் முன், டிசம்பர் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் ஓடிடியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முன்கூட்டியே, டிசம்பர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகலாம் என செய்திகள் கூறுகின்றன