Page Loader
சாண்டி மாஸ்டரின் 'ரோசி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
சாண்டி மாஸ்டரின் 'ரோசி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சாண்டி மாஸ்டரின் 'ரோசி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

எழுதியவர் Nivetha P
Nov 16, 2023
07:50 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமா உலகில் வளர்ந்துவரும் நடன இயக்குனர்களுள் ஒருவர் தான் சாண்டி மாஸ்டர். இவர் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடியவர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார். பிக் பாஸ் என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொண்டு ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தினை பிடித்தவர் சாண்டி. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'லியோ' திரைப்படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். இந்நிலையில், தற்போது கன்னடத்தில் ஷுன்யா இயக்கத்தில், சாண்டி ஓர் புதிய படத்தில் நடித்து வருகிறார். 'ரோசி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை டி.ஒய்.ராஜேஷ் மற்றும் டி.ஒய்.வினோத் இணைந்து தயாரிக்கின்றனர், குருகிரண் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை, இயக்குனர் பா ரஞ்சித் அண்மையில் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்