துருவ நட்சத்திரத்திலிருந்து சூர்யா பின்வாங்கியது, விஜய் யோஹனை நிராகரித்த காரணம்..: GVM ஓபன் டாக்
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆறு வருடமாக படப்பிடிப்பில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தை, இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வழியாக முடித்த நிலையில், அப்படம் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில், அவர் படத்திலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், சமீபத்தில் ஜிவிஎம் கலாட்டா பிளஸ்க்கு அளித்த நேர்காணலில், சூர்யா துருவ நட்சத்திரம் திரைப்படத்திலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
"மும்பை தாக்குதலுக்குப் பிறகு, அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க ஒருவரால் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது."
"பதினொரு பேர் கொண்ட குழுவைப் ஒருவரின் உத்தரவுக்கு கீழ் இயங்கும், இப்போது, அவர்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள், அதை எப்படி எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்பதுதான் படம்" என்ற கதையை சூர்யாவிடம் ஜிவிஎம் சொல்லியுள்ளார்.
2nd card
துருவ நட்சத்திரம் கதை நம்பும்படியாக இல்லை எனக் கூறிய சூர்யா
திரைப்படத்தின் அவுட் லைனை கேட்ட சூர்யா, "உண்மையில் இப்படி இருக்க வாய்ப்பில்லை. இப்படி படம் உருவாக்கினால் ரசிகர்களின் நம்பகத்தன்மையை பெற முடியாது" என கூறியுள்ளார்.
அவரை சமாதானப்படுத்த முயன்ற GVM, "இதை நம்பும்படியான ஆக்ஷன் திரைப்படமாக தயாரிக்கலாம்" என கூறியுள்ளார்.
இருந்தபோதும் தான் சூர்யாவை திருப்திபடுத்த முடியாததால், அவர் நடிக்க முடியாமல் போனதாக, ஜிவிஎம் அந்த நேர்காணலில் தெரிவித்தார்.
பின்னர், சில வருடங்கள் கழித்து விக்ரமிடம், ஜிவிஎம் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் போது, இக்கதையைச் சொல்ல விக்ரமுக்கு பிடித்துப் போய்விட, துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் இணைந்ததாக அவர் பகிர்ந்து கொண்டார்.
3rd card
யோகன் கதையில் விஜய் நடிக்காமல் போனது ஏன்?
மேலும் அந்த நேர்காணலில் யோகன் படத்தில் விஜய் நடிக்காமல் போனது குறித்தும் ஜிவிஎம் பேசியுள்ளார்.
துருவ நட்சத்திரம் போல் அல்லாமல், உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதம் விற்பனை செய்யும் ஒருவனை எதிர்த்து போராடும், ஒரு ஏஜெண்டை பற்றிய கதை யோஹன்.
ஒரு ஏஜெண்டாக, ஆயுதம் விற்பனை செய்பவரை எதிர்த்து கதையின் நாயகன் போராடுகிறார். இது, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தைப் போன்ற கதையென ஜிவிஎம் தெரிவித்தார்.
இக்கதையை விஜயிடம் சொல்ல, அவர் இது அதிகப்படியான ஆங்கில படம் போல் உள்ளது எனவும், படம் அமெரிக்காவில் நடைபெறுவதாலும், ஹீரோயின் ஆங்கிலம் பேசுவதாலும் அவர் மறுத்ததாக ஜிவிஎம் தெரிவித்துள்ளார்.