கூகுள்: செய்தி

அமெரிக்க பயனாளர்களுக்கு AI வசதியுடன் கூடிய 'NotebookLM' சேவையை அறிமுகப்படுத்திய கூகுள்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வசதியுடன் இயங்கக்கூடிய வகையிலான 'நோட்புக்LM' (NotebookLM) சேவையினை அமெரிக்க பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்.

ஜெமினி ஏஐயின் வெளியீட்டை ஜனவரி 2024-க்கு தள்ளி வைத்த கூகுள்

தற்போது செயற்கை நுண்ணறிவு சாட்பாட் மற்றும் கருவிகளில் நேரடிப் போட்டியில் இருப்பது கூகுளும், ஓபன்ஏஐ நிறுவனமும் தான். ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடிக்குப் போட்டியாக, பார்டு ஏஐ சாட்பாட்டை அறிமுகப்படுத்தியது கூகுள்.

செயல்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்: உங்கள் ஜிமெயிலை பாதுகாப்பது எப்படி?

கூகுள் நிறுவனம் செயலற்ற கணக்குக் கொள்கையின் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல், செயலற்ற ஜிமெயில் கணக்குகளை நீக்கத் தொடங்குகிறது.

கூகுள் டிரைவில் இருந்து தொலைந்து போன பயனாளர்களின் தகவல்கள்; கூகுளின் விளக்கம் என்ன?

சமீப காலங்களில் இணையதள பயனாளர்களின் பிராதன சேமிப்புத் தளமாக கூகுள் டிரைவ் போன்ற கிளவுடு சேமிப்புத் தளங்கள் மாறியிருக்கின்றன.

27 Nov 2023

யுபிஐ

கூகுள் பே மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைக்கு சேவைக் கட்டணம் வசூலிக்கும் கூகுள்?

உலகளவில் இந்தியாவை முன்னணி டிஜிட்டல் பணப்பரிவர்த்தை மையாமாக மாற்றிய பெருமை யுபிஐ-யையே சேரும். இலவசமாக மொபைல் மூலமே வங்கி முதல் வங்கி வரையிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை சாத்தியமாக்கியது யுபிஐ.

27 Nov 2023

இந்தியா

CCI-யின் முடிவு மீதான கூகுளின் மேல்முறையீட்டு இறுதி விசாரணையை தள்ளிவைத்தது NCLAT

தங்கள் மீது ரூ.936 கோடி அபராதம் விதித்த இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) முடிவை எதிர்த்து, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (NCLAT) வழக்கு தொடர்ந்திருந்தது கூகுள்.

ப்ரீமியம் பயனாளர்களுக்கு 'Playables' வசதியை அறிமுகப்படுத்திய யூடியூப்

யூடியூப் நிறுவனமானது ப்ரீமியம் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் 'பிளேயபில்ஸ்' (Playables) என்ற புதிய கேமிங் வசதியை தங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

'கூகுள் பே' பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது கூகுள் நிறுவனம்

'கூகுள் பே' பயன்படுத்தும் நபர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பினை கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய மறுத்த அமெரிக்க நீதிமன்றம்

மெட்டா, பைட்டான்ஸ், ஆல்ஃபபெட் மற்றும் ஸ்னாப் ஆகிய நிறுவனங்களின் சமூக வலைத்தளங்கள் குழந்தைகள் மற்றும் சிறியவர்களிடம் மனநலனில் எதிர்மறை பாதிப்புகளை உண்டாக்குவதாகக் கூறி அமெரிக்காவில் உள்ள 42 மாகாணங்களிலிருந்து 140-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக நத்திங் சேட்ஸ் செயலியானது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது நத்திங். இந்நிலையில், தங்களது ப்ளாக்ஷிப் நத்திங் போன் (2)-வுக்கான 'நத்திங் சேட்ஸ்' (Nothing Chats) என்ற புதிய ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம்.

'பார்டு AI'-யின் மேம்பட்ட வடிவமான 'ஜெமினி AI'-யின் வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கும் கூகுள்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப போட்டியில் தற்போது முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனத்துடன் சரிசமமாகப் போட்டியிட்டு வருகிறது கூகுள்.

17 Nov 2023

ஆப்பிள்

RCS குறுஞ்செய்தி சேவையை ஐபோனில் கொடுக்கத் திட்டமிடும் ஆப்பிள்

நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக 2024ம் ஆண்டு முதல் தங்களுடைய ஐபோன்களில் RCS (Rich Communication Service) சேவையை வழங்க ஆப்பிள் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

14 Nov 2023

தீபாவளி

தீபாவளி பற்றி அதிகம் தேடப்பட்ட 5 கேள்விகள்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வெளியீடு

இந்தியாவின் அதிகம் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளியின் கொண்டாட்டங்கள் ஓய்ந்து விட்டது.

சிறிய ஆன்லைன் தளங்களில் தீவிரவாத உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய கருவி: கூகுள்

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் கீழ் இயங்கும், கூகுளின் ஒரு பிரிவான 'ஜிக்ஸா'வின் மூலம் (Jigsaw) சிறிய ஆன்லைன் தளங்கள், தீவிரவாத உள்ளடக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும், அப்படியான உள்ளடக்கங்களை தங்களது தளங்களில் குறைக்கவும் தேவையான புதிய கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறது கூகுள்.

'கேரக்டர்.AI' ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வரும் கூகுள், ஏன்?

ஓபன்ஏஐ நிறுவனத்துடன் இணைந்து தங்களுடைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப செயல்பாடுகளை மைக்ரோசாஃப்ட் முன்னெடுத்து வரும் நிலையில், கூகுள் நிறுவனமும், வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்ப சாட்பாட் சேவையை வழங்கி வரும் கேரக்டர்.ஏஐ (Character.AI) ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்து குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

டிசம்பர் 1 தொடங்கி பயன்பாடற்ற கணக்குகளை நீக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள்

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் மற்றும் அக்கணக்குகள் சார்ந்த தகவல்களை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்கிவிருக்கிறது கூகுள். இது குறித்த அறிவிப்பை இந்த ஆண்டு மே மாதமே அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.

நெட்ஃபிலிக்ஸூக்கு பிரத்தியேக சலுகை வழங்கிய கூகுள்.. ஒப்புக் கொண்ட கூகுளின் செய்தித் தொடர்பாளர்

கூகுளின் பிளே ஸ்டோர் கட்டண முறை தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த எபிக் மற்றும் கூகுள் இடையே அமெரிக்காவில் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக, நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு கூகுள் நிறுவனம் சலுகை அளிக்க முன்வந்தது தெரியவந்திருக்கிறது.

உங்கள் கூகுள் கிரோம், மெமரி பயன்பாட்டை ட்ராக் செய்கிறதா? எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

கூகுள் கிரோம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செயலில் உள்ள ஒவ்வொரு Tab-லும் எவ்வளவு மெமரி ஸ்பேஸ் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க பயனர்களுக்கு உதவுகிறது.

தங்கள் AI கருவிகளில் அரசியல் உள்ளடக்கங்களை உருவாக்குவதைத் தடை செய்த மெட்டா

உலகளவில் மெட்டா, கூகுள், ஓபன்ஏஐ மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பொதுப் பயன்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

06 Nov 2023

கேரளா

தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடிய சைபர் கிரைம்

கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, இணையத்தில் தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை சைபர் கிரைம் போலீசார் நாடி உள்ளனர்.

05 Nov 2023

இந்தியா

உளகளவில் சீனாவிற்கு மாற்றாக முக்கியமான உற்பத்தி மையமாக வளர்ந்து வரும் இந்தியா

சமீபத்தில் இந்தியாவில் தங்களது புதிய பிக்சல் 8 ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தது கூகுள். ஏற்கனவே ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது உற்பத்தி நடவடிக்கைகள் பெருக்கி வரும் நிலையில், கூகுளின் இந்தப் அறிவிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

'கார் கிராஷ் டிடெக்ஷன்' வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்திய கூகுள்

கூகுள் நிறுவனமானது தங்களுடைய பிக்சல் ஸ்மார்ட்போன்களி கார் கிராஷ் டிடெக்ஷன் என்ற வசதியை 2019ம் ஆண்டிலிருந்தே அளித்து வருகிறது. ஆனால், அனைத்து நாடுளிலும் இல்லாமல் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் இந்த வசதியை வழங்கி வந்தது கூகுள்.

'மேப்ஸ்' சேவை AI தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தும் கூகுள்

ஸ்மார்ட்போன் மற்றும் தேடுபொறி சேவையைத் தொடர்ந்து தங்களுடைய மேப்ஸ் சேவையை மேம்படுத்தி வருகிறது கூகுள். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் மற்றும் கருவிகளை பிற சேவைகளைத் தொடர்ந்து மேப்ஸ் சேவையிலும் வழங்கத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.

25 Oct 2023

உலகம்

இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் 

பஞ்ஜா லூகா மற்றும் போஸ்னியா ஹெர்சகோவினா பல்கலைக்கழங்களின் மூத்த உதவி பேராசிரியராகவும், 'கூகுள்' நிறுவன சாப்ட்வேர் எஞ்சினியராகவும் பணியாற்றி வருபவர் லேடன் அடமோவிக்.

இந்தியாவிலேயே பிக்சல் 8 ஸ்மார்ட்போனை தயாரிக்கவிருக்கும் கூகுள்

இந்த மாதத் தொடக்கத்தில் தங்களுடைய ஃப்ளாக்ஷிப் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை, இந்தியா உட்பட உலகளவில் பல்வேறு நாடுகளிலும் வெளியிட்டது கூகுள்.

17 Oct 2023

போன்பே

கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் 'இன்டஸ் ஆப் ஸ்டோரை' அறிமுகப்படுத்திய போன்பே

கூகுளின் பிளே ஸ்டோருக்கு போட்டியாக இந்தியாவிற்கான தங்களது புதிய ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்தியாவில் கட்டண சேவைகளை வழங்கி வரும் போன்பே நிறுவனம்.

AI உதவியுடன் வாகன புகை மாசுபாட்டைக் குறைக்க உதவும் கூகுள்

நகரங்களில் வாகனப் புகையினால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 'க்ரீன் லைட்' என்ற புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது கூகுள்.

இந்தியாவில் கூகுள் தவிர்த்த மின்சாதன வேரியன்ட்கள் மற்றும் பிற வசதிகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய 'மேடு பை கூகுள்' நிகழ்வின் மூலம் புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றையும் உலகமெங்கும் அறிமுகப்படுத்தியது கூகுள். இந்தப் புதிய சீரிஸின் கீழ் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு போன்கள் வெளியானது. மேலும், இந்தியாவிலும் அவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் வெளியானது கூகுளின் புதிய 'பிக்சல் 8 சீரிஸ்' ஸ்மார்ட்போன்கள்

புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சை வெளியிடும் தங்களுடைய வருடாந்திர நிகழ்வான 'மேடு பை கூகுள்' நிகழ்வை நடத்தி முடித்திருக்கிறது கூகுள். இன்றைய (அக்டோபர் 4) நிகழ்வில் பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல் வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச் ஆகிய கேட்ஜட்களை வெளியிட்டிருக்கிறது கூகுள்.

தேவையற்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதைக் குறைக்க கூகுள் புதிய நடவடிக்கை

கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் அதிகப்படியான தேவையில்லாத மற்றும் சம்பந்தமில்லாத மின்னஞ்சல்களால் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் அனைவருமே அவதிப்பட்டிருப்போம். தேவையில்லாத மின்னஞ்சல்களுக்கு மத்தியில், நமக்குத் தேவையான மின்னஞ்சலைக் கூட சில நேரங்களில் தவற விட்டிருப்போம்.

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் 'மேடு பை கூகுள்' நிகழ்வை இன்று நடத்துகிறது கூகுள்

சாம்சங் மற்றும் ஆப்பிளைத் தொடர்ந்து தங்களுடைய புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட சாதனங்களை வெளியிடும் 'மேடு பை கூகுள்' வருடாந்திர நிகழ்வை இன்று (அக்டோபர் 4) நடத்தவிருக்கிறது கூகுள்.

அமெரிக்க நீதிமன்றத்தில் கூகுளுக்கு எதிராக சாட்சியம் அளித்த சத்யா நாதெல்லா

எந்தவொரு சந்தையில் போட்டி என்பது மிகவும் அவசியம். போட்டியில்லாத வணிகம் என்பது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்திடம் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் அளிப்பதற்கு சமமாகிறது. எனவே, அனைத்து சந்தைகளிலும் போட்டி நிலவுவதை உறுதி செய்ய அனைத்து நாட்டு அரசுகளும் தனி அமைப்புகளை நிறுவியிருக்கின்றன.

ஜிமெயிலின் 'அடிப்படை HTML' வசதியை நிறுத்துகிறது கூகுள்

பயனாளர்களிடம் வரவேற்பைப் பெறாத தொழில்நுட்பங்கள் மற்றும் குறைந்த அளவிலான பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தும் பல்வேறு வசதிகளை நிறுத்தி வருகிறது கூகுள். அந்த வரிசையில் ஜிமெயில் சேவையில் வழங்கப்பட்டு வந்த 'அடிப்படை HTML' வசதியை நிறுத்தவிருக்கிறது கூகுள்.

பார்டு சாட்பாட்டில் 'நினைவு கொள்ளும்' புதிய வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் கூகுள்

கடந்தாண்டு வெளியான உருவாக்க செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டிற்குப் போட்டியாக, தங்களுடைய பார்டு AI சாட்பாட்டை கடந்த மே மாதம் உலகமெங்கும் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தியது கூகுள்.

அமெரிக்காவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட போட்டோஸ் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்

அமெரிக்காவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'போட்டோஸ்' (Photos) செயலியை பொதுப்பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வெளியிட்டு வருகிறது கூகுள். இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட செயலியில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது கூகுள்.

மீண்டும் தள்ளிப் போன ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வெளியீடு

ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான புதிய ஆண்ராய்டு 14 இயங்குதளத்தை முன்னதாக, செப்டம்பர் மாதம் கூகுள் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி இந்த மாதம் புதிய இயங்குதளத்தை கூகுள் அறிமுகப்படுத்தவில்லை.

17 Sep 2023

உலகம்

இரண்டாவது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார் கூகுள் துணை நிறுவனர் செர்கே பிரின்

தன்னுடைய இரண்டாவது மனைவி நிகோல் ஷனஹானுடனான , கூகுளின் துணை நிறுவனரான செர்கே பிரின்னின் விவாகரத்து நடவடிக்கைகள் முடிவடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பணியர்த்தல் பிரிவு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்திருக்கும் ஆல்ஃபபெட்

கடந்த ஜனவரி மாதம் முதலே தங்கள் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஊழியர்களின் பணிநீக்கத்தில் ஈடுபட்டு வந்தது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்.

தகவல் திருட்டுக்கு வாய்ப்பு, அனைத்து செயலிகள் மற்றும் மென்பொருட்களை அப்டேட் செய்ய வலியுறுத்தல்

நமது ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளில் உபயோகிக்கும் பல்வேறு மென்பொருட்களில் பயனர்களின் தகவல்களை பாதிக்கக்கூடிய கோளாறு ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்தக் கோளாறானது, libwebp library-ஐ பயன்படுத்தும் அனைத்து மென்பொருட்களிலும் காணப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

தேடுபொறியிலும் எமோஜி 'கிட்சன் வசதியை' அறிமுகப்படுத்தியது கூகுள்

தினசரி வாட்ஸ்அப் சாட்களில் நாம் அனைவரும் அதிகம் எமோஜிக்களைப் பயன்படுத்தியிருப்போம். உணர்வுகளை ஒற்றைப் புள்ளியில் வெளிப்படுத்த எமோஜிக்கள் உதவுகின்றன. அப்படியான எமோஜிகள் இரண்டை, ஒன்றாக இணைத்துப் புதிய எமோஜியை உருவாக்கிப் பயன்படுத்த முடிந்தால்?