இந்தியாவிலேயே பிக்சல் 8 ஸ்மார்ட்போனை தயாரிக்கவிருக்கும் கூகுள்
இந்த மாதத் தொடக்கத்தில் தங்களுடைய ஃப்ளாக்ஷிப் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை, இந்தியா உட்பட உலகளவில் பல்வேறு நாடுகளிலும் வெளியிட்டது கூகுள். அதனைத் தொடர்ந்து தற்போது, புதிய பிக்சல் 8 மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். இது குறித்த அறிவிப்பானது, டெல்லியில் நடைபெற்ற 'கூகுள் ஃபார் இந்தியா' நிகழ்வில் வெளியிடப்பட்டிருக்கிறது. சர்வதேச மற்றும் உள்நாட்டு தயாரிப்பாளர்களுடன் கைகோர்த்து புதிய பிக்சல் 8 ஸ்மார்ட்போனை இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். மேலும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிக்சல் 8 ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு முதல் விற்பனை செய்யவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இது குறித்த பதிவொன்றையும், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை.