செயல்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்: உங்கள் ஜிமெயிலை பாதுகாப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
கூகுள் நிறுவனம் செயலற்ற கணக்குக் கொள்கையின் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல், செயலற்ற ஜிமெயில் கணக்குகளை நீக்கத் தொடங்குகிறது.
கடந்த மே மாதம், இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அந்நிறுவனம், டிசம்பர் 1 ஆம் தேதி முதல், இரண்டு வருடங்கள் செயல்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படும் என அறிவித்திருந்தது.
இந்தத் கொள்கையின்படி, ஜிமெயில் கணக்குடன் தொடர்புடைய, டாக்ஸ், யூடியூப், கூகுள் புகைப்படங்கள், காலண்டர் உள்ளிட்டவை தொடர்பான அனைத்து தகவல்களும் நீக்கப்படும்.
2nd card
கூகுள் நிறுவனம் ஏன் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்குகிறது?
கூகுள் நிறுவனத்தின் இத்திட்டத்திற்கு, அந்நிறுவனம் எந்த விதமான அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளிக்கவில்லை.
இருப்பினும், நீண்ட காலமாக செயலற்று இருக்கும் கூகுள் கணக்குகளின் பாதுகாப்பில் சமரசம் ஏற்படலாம் என்றும்,
பழைய கடவுச்சொற்கள் மற்றும் இரண்டு காரணி அங்கீகாரம்(two-factor authentication.) ஆகியவை இருக்காது என்பதால், அந்த கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்குவதாக கூறப்படுகிறது.
எனினும், இது செயல்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகளில் இருந்து தரவுகள் அளிக்கப்படுவதை தவிர்க்கவும், பழைய கணக்குகளை நிர்வகிக்கும் வாய்ப்பையும் மக்களுக்கு வழங்குகிறது.
3rd card
ஜிமெயில் கணக்குகளை எப்படி பாதுகாப்பது?
டிசம்பர் 1 தேதி தேதிக்கு பின், உங்கள் ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படுவதை தவிர்க்க, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது உங்கள் கணக்கில் லாகின் செய்வது நல்லது.
லாகின் செய்யப்பட்ட உங்கள் ஜிமெயிலில், மின்னஞ்சல்களை படிப்பது, நாட்காட்டியை பார்ப்பது, பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வது உள்ளிட்டவற்றை, கூகுள் உங்கள் கணக்கு செயல்படுவதாக காண்கிறது.
மேலும், உங்கள் ஜிமெயில் கணக்குடன் நீங்கள் எளிதாக அணுகக்கூடிய மீட்பு மின்னஞ்சல் முகவரியை இணைப்பது நல்லது. இதன் மூலம் கடவுச்சொல்லை மறந்தாலும் உங்கள் பழைய கணக்குகளை மீட்க முடியும்.
கூகுள் நிறுவனமும், உங்கள் பழைய கணக்குகளை நீக்கும் முன், மீட்பு மின்னஞ்சல் முகவரிக்கும், இது குறித்த மின்னஞ்சல் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.