
சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய மறுத்த அமெரிக்க நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
மெட்டா, பைட்டான்ஸ், ஆல்ஃபபெட் மற்றும் ஸ்னாப் ஆகிய நிறுவனங்களின் சமூக வலைத்தளங்கள் குழந்தைகள் மற்றும் சிறியவர்களிடம் மனநலனில் எதிர்மறை பாதிப்புகளை உண்டாக்குவதாகக் கூறி அமெரிக்காவில் உள்ள 42 மாகாணங்களிலிருந்து 140-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
தங்களது சமூக வலைத்தள சேவைகள் மீதான இந்த வழங்குகளை ரத்து செய்யக்கோரி மேற்கூறிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன.
மேற்கூறிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்ட வழக்க விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி யுவோன் கோன்சாலேஸ் ரோஜர்ஸ், சமூக வலைத்தளங்கள் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறிய அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய முடியாது எனவும், அதில் குறிப்பிட்ட வழங்குகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் சந்தித்தே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளம்
சமூக வலைத்தள நிறுவனங்கள் மீது வழக்கு:
மெட்டாவின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், பைட்டான்ஸின் டிக்டாக், ஆல்ஃபபெட்டின் யூடியூப் மற்றும் ஸ்னாப்பின் ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதே 140-க்கும் மேற்பட்ட வழங்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதில் பல்வேறு வழங்குகள் சுதந்திரமான பேச்சை அடிப்படையாக வைத்து பதிவு செய்யப்படவில்லை, எனவே சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் முதல் சட்டத்திருத்தம், பிரிவு 230-ஐ பயன்படுத்தி அவர்கள் தப்பிக்க முடியாது எனத் தெரிவித்திருக்கிறார் கோன்சாலேஸ் ரோஜர்ஸ்.
முக்கியமாகக் குழந்தைகளின் மனநலன் மற்றும் உடல்நலனைப் பாதிப்பதைக் தடுக்கும் வசதிகளை சமூக வலைத்தள நிறுவனங்கள் கொண்டிருக்காதது உள்ளிட்ட சில வழக்குளை ரத்து செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார் அவர்.