Page Loader
கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் 'இன்டஸ் ஆப் ஸ்டோரை' அறிமுகப்படுத்திய போன்பே
கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் 'இன்டஸ் ஆப் ஸ்டோரை' அறிமுகப்படுத்திய போன்பே

கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் 'இன்டஸ் ஆப் ஸ்டோரை' அறிமுகப்படுத்திய போன்பே

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 17, 2023
04:51 pm

செய்தி முன்னோட்டம்

கூகுளின் பிளே ஸ்டோருக்கு போட்டியாக இந்தியாவிற்கான தங்களது புதிய ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்தியாவில் கட்டண சேவைகளை வழங்கி வரும் போன்பே நிறுவனம். புதிய ஆப் ஸ்டோர் ஒன்றை போன்பே அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த சில மாதங்களாகத் தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது அது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்டஸ் ஆப் ஸ்டோர் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய ஆப் ஸ்டோரில், செயலிகளை பட்டியலிடுவதற்கு அதனை உருவாக்கியவர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவித்திருக்கிறது போன்பே. முதல் ஒரு வருடத்தைத் தொடர்ந்து தங்களது ஆப் ஸ்டோரில் நீடிக்க ஒரு குறிப்பிட்ட சிறிய தொகையை மட்டும் கட்டணமாக வசூலிக்கவிருக்கிறது அந்நிறுவனம்.

கூகுள்

இடைத்தரகர் கட்டணம் இல்லை: 

உலகின் முன்னணி ஆப் ஸ்டோர்களைக் கொண்டிருக்கும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களானது, தங்களது ஆப் ஸ்டோரில் பட்டியலிடப்பட்டிருக்கும் செயலிகளில் மேற்கொள்ளப்படும் கட்டணங்களில் 15% முதல் 25% வரை தரகுக் கட்டணமாக வசூலித்து வந்தன. இதனாலேயே பல நாடுகளில் கூகுள் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர்கள் மீது பல்வேறு புகார்கள் பதியபட்டு வழக்குகள் நடைபெற்று வந்தது. தற்போது தங்களது இன்டஸ் ஆப் ஸ்டோரில் அப்படியான தரகுக் கட்டணம் எதுவும் இல்லை எனத் தெரிவித்திருக்கிறது போன்பே. இந்தியாவிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆப் ஸ்டோரை 12 இந்திய மொழிகளில் வழங்கவிருக்கிறது போன்பே. மேலும், பயனாள்கள் தேர்ந்தெடுக்கும் மொழியின் அடிப்படையிலேயே அவர்களுக்கான பரிந்துரைகளும் வழங்கப்படவிருக்கின்றன.