NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 'பார்டு AI'-யின் மேம்பட்ட வடிவமான 'ஜெமினி AI'-யின் வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கும் கூகுள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பார்டு AI'-யின் மேம்பட்ட வடிவமான 'ஜெமினி AI'-யின் வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கும் கூகுள்
    'பார்டு AI'-யின் மேம்பட்ட வடிவமான 'ஜெமினி AI'-யின் வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கும் கூகுள்

    'பார்டு AI'-யின் மேம்பட்ட வடிவமான 'ஜெமினி AI'-யின் வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கும் கூகுள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 17, 2023
    02:08 pm

    செய்தி முன்னோட்டம்

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப போட்டியில் தற்போது முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனத்துடன் சரிசமமாகப் போட்டியிட்டு வருகிறது கூகுள்.

    முதன்முதலாக சாட்ஜிபிடியின் (ஜிபிடி-3.5) அறிமுகத்துடன், தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கான போட்டியைத் தொடங்கி வைத்தது ஓபன்ஏஐ நிறுவனம்.

    அதனைத் தொடர்ந்து சாட்ஜிபிடிக்குப் போட்டியாக தங்களுடைய பார்டு AI-யைக் களமிறங்கியது கூகுள். அதுமட்டுமில்லாமல் தங்களுடைய இன்னபிற AI கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களையும் கடந்த மே மாதம் நடைபெற்ற தங்களுடைய வருடாந்திர நிகழ்வான I/O நிகழ்வில் அறிமுகப்படுத்தியது கூகுள்.

    சாட்ஜிபிடிக்குப் பிறகு ஜிபிடி-4, அதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு ஜிபிடி-4 டர்போ என மிகவும் மேம்படுத்தப்பட்ட AI மாடல்களை வெளியிட்டுவிட்டது ஓபன்ஏஐ. ஆனால், அதற்கு இணையான வேறு AI மாடல்களை கூகுள் இன்னும் வெளியிடவில்லை.

    கூகுள்

    கூகுளின் ஜெமினி AI: 

    பார்டு AI-யின் மேம்பட்ட வடிவமாக, ஓபன்ஏஐயின் ஜிபிடி-4 சாட்பாட் மாடலுக்குப் போட்டியாக கூகுள் உருவாக்கி வந்த சாட்பாட் மாடலே ஜெமினி AI.

    இந்தாண்டு மே மாதம் நடைபெற்ற I/O நிகழ்வில் இந்த ஜெமினி AI குறித்த அறிமுகத்தைக் கொடுத்த, இந்த நவம்பர் மாதம் அதனை வெளியிடவிருப்பதாகவும் அறிவித்திருந்தது கூகுள். ஆனால், நவம்பரே முடியவிருக்கும் நிலையில் அதுகுறித்த மேலதிக் அறிவிப்புகள் கூகுளிடமிருந்து இல்லை.

    இந்நிலையில் தான் தற்போது, ஜெமினி AI மாடலின் வெளியீட்டை 2024ம் ஆண்டின் முதல் காலாண்டிற்கு அந்நிறுவனம் தள்ளி வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    பார்டைப் போல டெக்ஸ்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்காமல், புகைப்படங்களை உருவாக்கும் திறனையும் ஜெமினி AI கொண்டிருக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    செயற்கை நுண்ணறிவு
    சாட்ஜிபிடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கூகுள்

    இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள் சுதந்திர தினம்
    பொய்யான, தவறான தகவல்கள் மற்றும் செய்திகளை வடிகட்ட முடியாத AI சாட்பாட்கள் செயற்கை நுண்ணறிவு
    ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் தொழில்நுட்பம்
    ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை, ரூ.1 கோடி சம்பளம் தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவு

    சாட் ஜிபிடி, பார்டுக்கு போட்டியாக களமிறங்கியது எலான் மஸ்கின் xAI எலான் மஸ்க்
    தென்னிந்தியாவின் முதல் AI செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்த கன்னட செய்தி நிறுவனம் இந்தியா
    'Llama 2' லாங்குவேஜ் மாடலை ஓபன் சோர்சாக வெளியிட்டுள்ளது மெட்டா மெட்டா
    'ஜெனிசிஸ்' துணையுடன், செய்திகள் எழுத தயாராகும் கூகிள் தொழில்நுட்பம்

    சாட்ஜிபிடி

    பாதுகாப்பு குறைபாடுகள் நிறைந்த AI சாட்பாட்கள்.. சுட்டிக்காட்டிய இஸ்ரேல் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்!  செயற்கை நுண்ணறிவு
    'GPT' என்ற சுருக்கத்தின் ட்ரேடுமார்க்கிற்கு விண்ணப்பித்திருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025