NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / அமெரிக்க நீதிமன்றத்தில் கூகுளுக்கு எதிராக சாட்சியம் அளித்த சத்யா நாதெல்லா
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க நீதிமன்றத்தில் கூகுளுக்கு எதிராக சாட்சியம் அளித்த சத்யா நாதெல்லா
    அமெரிக்க நீதிமன்றத்தில் கூகுளுக்கு எதிராக சாட்சியம் அளித்த சத்யா நாதெல்லா

    அமெரிக்க நீதிமன்றத்தில் கூகுளுக்கு எதிராக சாட்சியம் அளித்த சத்யா நாதெல்லா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 03, 2023
    11:24 am

    செய்தி முன்னோட்டம்

    எந்தவொரு சந்தையில் போட்டி என்பது மிகவும் அவசியம். போட்டியில்லாத வணிகம் என்பது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்திடம் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் அளிப்பதற்கு சமமாகிறது. எனவே, அனைத்து சந்தைகளிலும் போட்டி நிலவுவதை உறுதி செய்ய அனைத்து நாட்டு அரசுகளும் தனி அமைப்புகளை நிறுவியிருக்கின்றன.

    நவீன காலத்தில் இணையத்தில் தேடுபொறி சேவையில் பெரிய அளவிலான போட்டியின்றி ஏகபோக அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது கூகுள். இணையத் தேடுதல் என்பதற்கான அகராதியாக விளங்குகிறது கூகுள்.

    இந்நிலையில், சந்தையில் உருவாகும் போட்டியாளர்களை தங்களுடைய ஏகபோக அதிகாரத்தைப் பயன்படுத்தி கூகுள் தலைதூக்க விடாமல் செய்வதாகவும், போட்டியைக் கட்டுப்படுத்த பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கூகுள் மீது பல்வேறு குற்றசாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர்ந்திருக்கிறது அமெரிக்க நீதித் துறை.

    மைக்ரோசாஃப்ட்

    சாட்சியம் அளித்த அழைக்கப்பட்ட சத்யா நாதெல்லா: 

    கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபப்டெட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டிருக்கும் இந்த வழக்கில், அரசுத் தரப்பில் சாட்சியளிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா அழைக்கப்பட்டிருந்தார்.

    தேடுபொறி சேவை மட்டுமின்றி, மின்னஞ்சல், மேகக் கணினியம் எனப் பல்வேறு துறைகளில் மைக்ரோசாஃப்டும், கூகுளும் போட்டியாளர்களாக இருக்கின்றன. இரண்டுமே தொழில்நுட்பப் பெரு நிறுவனங்கள் தாம்.

    ஆனால், மைக்ரோசாஃர்ட் போன்ற ஒரு பெருநிறுவனத்தாலேயே தேடுபொறி சேவையில் கூகுளை எதிர்த்து நிற்க முடியவில்லை.

    அவரை கூகுளுக்கு எதிரான இந்த வழக்கில் கூகுளுக்கு எதிரான சந்தை நிலவரத்தை, கூகுளின் முறைகேடுகளைப் பற்றி சாட்சியம் தெரிவிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தது அமெரிக்க நீதித் துறை.

    கூகுள்

    சத்யா நாதெல்லாவின் சாட்சியம்: 

    ஆப்பிளுடன் கூகுள் செய்திருக்கும் ஒப்பந்தம் காரணமாக தங்களால் ஆப்பிள் சாதனங்களில் நுழைய முடிவில்லை எனத் தெரிவித்திருக்கிறார் சத்யா நாதெல்லா.

    'மிகவும் பிரபலமான சேவையாக இருப்பதால் கூகுளை அனைவரும் பயன்படுத்தவில்லை, தங்களுடைய வழிமுறைகளைப் பயன்படுத்தி மக்களைப் பயன்படுத்த வைக்கிறது அந்நிறுவனம். பிரபலமான தேடுபொறியாக அறியப்படுவதற்கே பல்வேறு முறையற்ற வழிமுறைகளை கூகுள் பயன்படுத்தியது' என குற்றம்சாட்டியிருக்கிறார் அவர்.

    கூகுள் தேடுபொறி சேவையை மட்டும் அளிக்கவில்லை, குரோம் உலாவி, ஜிமெயில் மின்னஞ்சல் எனப் பல்வேறு பிரிவுகளிலும் தங்களது சேவைத் தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறது.

    எனவே, கூகுளின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட யாரும் விரும்புவதில்லை. மேலும், மற்ற போட்டியாளர்களால் கொடுக்க முடியாத பெருந்தொகையைக் கொடுத்து ஒப்பந்தங்களை மேற்கொள்கிறது கூகுள். இதனால் எவராலும் கூகுளுடன் போட்டியிட முடிவதில்லை எனத் தெரிவித்துள்ளார் அவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    மைக்ரோசாஃப்ட்
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கூகுள்

    கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்! ஆண்ட்ராய்டு
    32 ஆபத்தான நீட்டிப்புகளை வெப் ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்! தொழில்நுட்பம்
    ஆதார் எண்ணைக் பயன்படுத்தி யுபிஐ கணக்கை தொடங்கும் புதிய வசதி.. எப்படி? வங்கிக் கணக்கு
    கால் ரெக்கார்டிங் வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் தொழில்நுட்பம்

    மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?  எலான் மஸ்க்
    மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்!  வீடியோ கேம்
    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  செயற்கை நுண்ணறிவு
    AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்! செயற்கை நுண்ணறிவு

    அமெரிக்கா

    எத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் கார் ஜி20 மாநாடு
    இரயில்வே மற்றும் துறைமுக கட்டுமான திட்டங்களில் கையெழுத்திடவிருக்கும் இந்தியா மற்றும் சவுதி அரேபியா? இந்தியா
    தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா? செயற்கை நுண்ணறிவு
    19 வயதிலேயே முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காஃப் டென்னிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025