'கார் கிராஷ் டிடெக்ஷன்' வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்திய கூகுள்
கூகுள் நிறுவனமானது தங்களுடைய பிக்சல் ஸ்மார்ட்போன்களி கார் கிராஷ் டிடெக்ஷன் என்ற வசதியை 2019ம் ஆண்டிலிருந்தே அளித்து வருகிறது. ஆனால், அனைத்து நாடுளிலும் இல்லாமல் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் இந்த வசதியை வழங்கி வந்தது கூகுள். ஆனால், தற்போது இந்திய உட்பட ஐந்து நாடுகளிலும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். பிக்சல் 4a மற்றும் அதற்கு மேற்பட்ட சிம்கார்டுடன் கூடிய பிக்சல் போன்களில் இந்த கார் கிராஷ் டிடெக்ஷன் வசதியை பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆப்பிளின் கிராஷ் டிடெக்ஷன் வசதியைப் போலவே இதுனை ஒரு பாதுகாப்பு வசதியாக வழங்கி வருகிறது கூகுள். ஆனால், ஆப்பிளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் கூகுள் இதனை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கூகுளின் கார் கிராஷ் டிடெக்ஷன் வசதி:
பெயரைப் போலவே வாகன விபத்து ஏற்பட்டால் உடனடியாக எச்சரிக்கை எண்களுக்கு அழைப்பு விடுத்தும், நம்முடைய நெருங்கிய நபர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியும் நமக்கான உதவிகள் கிடைக்க வழி செய்வதே இந்த கார் கிராஷ் டிடெக்ஷன் வசதியின் முக்கிய நோக்கம். நாம் கார் விபத்தைச் சந்தித்திருப்பதாக பிக்சல் ஸ்மார்ட்போன் உணர்ந்தால், திரையில் 'ஐ ஆம் ஓகே' மற்றும் 'உதவி தேவை' என இரண்டு தேர்வுகளைக் காட்டுகிறது. அப்படி எந்த விபத்தையும் நாம் சந்திக்கவில்லை என்றால் 'ஐ ஆம் ஓகே' என்ற தேர்வை கிளிக் செய்து விடலாம். நாம் எதையும் தேர்வு செய்யவில்லை என்றால், நமக்கு நெருங்கியவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதோடு, நாம் இருக்கும் இடம் குறித்த தகவல்களையும் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறது.
இந்த வசதியை பயன்படுத்துவது எப்படி?
உங்களுடைய பிக்சல் ஸ்மார்போனில் பெர்சனல் சேஃப்டி செயலியின் உள்ளே, Features பிரிவில் கீழ் இந்த கார் கிராஷ் டிடெக்ஷன் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். அதனைத் தேர்வு செய்வதன் மூலம் இந்த வசதியை பயனாளர்கள் பயன்படுத்த முடியும். இந்த வசதியின் மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பவும், நம்முடைய இருப்பிடத் தகவல்களை தெரியப்படுத்தவும் சிம் கார்டும், நல்ல நெட்வொர்க் கவரேஜும் இருப்பது அவசியம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், நாம் சாதாரணமாக செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் போது கூட சில நேரங்களில் கார் கிராஷ் டிடெக்ஷன் வசதி தவறாக செயல்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.