Page Loader
ஜிமெயிலின் 'அடிப்படை HTML' வசதியை நிறுத்துகிறது கூகுள்
ஜிமெயிலின் 'அடிப்படை HTML' வசதியை நிறுத்துகிறது கூகுள்

ஜிமெயிலின் 'அடிப்படை HTML' வசதியை நிறுத்துகிறது கூகுள்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 02, 2023
04:40 pm

செய்தி முன்னோட்டம்

பயனாளர்களிடம் வரவேற்பைப் பெறாத தொழில்நுட்பங்கள் மற்றும் குறைந்த அளவிலான பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தும் பல்வேறு வசதிகளை நிறுத்தி வருகிறது கூகுள். அந்த வரிசையில் ஜிமெயில் சேவையில் வழங்கப்பட்டு வந்த 'அடிப்படை HTML' வசதியை நிறுத்தவிருக்கிறது கூகுள். ஜிமெயில் சேவையின் அடிப்படைய HTML வசதி என்பது, தற்போதைய நவீன ஜிமெயில் சேவையில் வழங்கப்படும் பல்வேறு கூடுதல் வசதிகள் இன்றி, முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜிமெயில் வடிவமாகும். பழைய மற்றும் வேகமான நெட்வொர்க் வசதி இல்லாத இடங்களில் இந்த அடிப்படை HTML வசதியைப் பயன்படுத்தினால், ஸ்டாண்டர்டான நவீன ஜிமெயல் சேவையை விட சற்று வேகமாக இருக்கும்.

கூகுள்

எப்போது நிறுத்துகிறது கூகுள்: 

நவீன ஜிமெயில் வடிவமைப்பை அறிமுகப்படுத்திய பிறகு, அடிப்படை HTML வசதியை பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் வைத்திருக்கிறது கூகுள். இந்நிலையில், 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், அதாவது தற்போதிலிருந்து மூன்று மாதங்களில் இந்த அடிப்படை HTML சேவையை மொபைல் மற்றும் டெஸ்க்டாப் என அனைத்துத் தளங்களிலும் நிறுத்தவிருப்பதாக தங்களது வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது கூகுள். குறைவான நெட்வொர்க் வசதி கொண்ட இடங்களில் பயன்படுத்தும் வகையிலான ஜிமெயில் வெர்ஷனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் திட்டத்தை வைத்திருக்கிறதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதனைத் தவிர்த்து, தங்களுடைய பாட்கேஸ்ட் சேவை மற்றும் வைட்போர்டிங் சேவையான ஜாம்போர்டு ஆகியற்றையும் கூகுள் நிறுத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.