கூகுள்: செய்தி

20 May 2023

சென்னை

சென்னையில் உள்ள கூகுள் CEO சுந்தர் பிச்சையின் வீடு சினிமா நடிகருக்கு விற்கப்பட்டது! 

கூகிள் CEO சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள தனது பழைய வீட்டை, தமிழ் சினிமாவின் நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் என்பவருக்கு விற்றுள்ளார்.

விப்ரோ ஊழியர்களுக்கு நல்ல செய்தி! நிறுவனத்தின் மற்றொரு பெரிய அறிவிப்பு! 

இன்ஃபோசிஸுக்குப் பிறகு, விப்ரோ சுமார் 3,98,733 பங்குகளை, தகுதியான ஊழியர்களுக்கு ஒதுக்கியுள்ளது.

பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் நீக்கம்.. கூகுளின் புதிய அறிவிப்பு!

சில வாரங்களுக்கு முன்பு பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை அத்தளத்திலிருந்து நீக்கவிருப்பதாக ட்வீட் செய்திருந்தார் அந்நிறுவனத்தின் அப்போதைய சிஇஓ எலான் மஸ்க்.

AI தொழில்நுட்பங்களுக்கான புதிய சட்டம்.. என்ன செய்கிறது அமெரிக்கா?

உலகில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தற்போது முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவைச் சேர்ந்தவை. ஆனால், AI-களுக்கான சட்டத்தை உருவாக்குவதில் தடைகளைச் சந்தித்து வருகிறது அமெரிக்கா.

என்னென்ன மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது கூகுள் தேடுபொறி?

இதுவரை வெறும் தேடுதல் கருவியாக மட்டும் இருந்து வந்த கூகுள் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்களுடன் நம்முடைய அலுவல்களைச் செய்யும் பணியாளாக மாறவிருக்கிறது அல்லது அப்படித்தான் அதனை அறிமுகப்படுத்துகிறது கூகுள்.

கூகுளின் பிக்சல் டேப்லட்டை விட சிறப்பான வசதிகளைக் கொண்டிருக்கிறது ஒன்பிளஸ் பேடு, ஏன்?

கடந்த வாரம் நடைபெற்ற I/O நிகழ்வில் தங்களுடைய புதிய பிக்சல் டேப்லட்டை அறிமுகம் செய்தது கூகுள். கடந்த மாதம் தான் தங்களுடைய புதிய டேப்லட்டையும் அறிமுகம் செய்தது ஒன்பிளஸ்.

சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 2

சாட்ஜிபிடியில் இல்லாத என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது பார்டு? பார்க்கலாம்.

சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 1

சாட்ஜிபிடி vs பார்டு.. இரண்டு சாட்பாட்களையும் அந்தந்த நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியதில் இருந்த இரண்டுக்கு என்ன வித்தியாசம் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

Ad blocker-களை தடை செய்யத் திட்டமிட்டு வரும் யூடியூப் நிறுவனம்!

பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும், மேலும் பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது கூகுளின் யூடியூப் தளம். இவைகளுக்கு அடித்தளமாக இருப்பது விளம்பரங்களே.

ஆண்ட்ராய்டு 14-ன் 2-வது பீட்டா வெர்ஷனை வெளியிட்டது கூகுள்.. அப்டேட் செய்து எப்படி?

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் இரண்டாவது பீட்டா அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது கூகுள்.

கூகுள் I/O நிகழ்வு.. AI சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன?

கூகுளின் I/O நிகழ்வில் பல புதிய AI வசதிகள் மற்றும் AI கருவிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள். அவற்றின் அறிமுகங்கள் இங்கே.

கூகுள் I/O நிகழ்வு.. அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் 'பார்டு சாட்பாட்'டை வெளியிட்டது கூகுள்!

தங்களின் வருடாந்திர I/O நிகழ்வில், தாங்கள் மேம்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் AI கருவிகள் குறித்த பல முக்கிய அறிவிப்புகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டது கூகுள்.

கூகுள் I/O நிகழ்வில் வெளியிடப்பட்ட புதிய சாதனங்கள் என்னென்ன?

தங்களுடைய I/O நிகழ்வில் மூன்று சாதனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். அவற்றின் அறிமுகங்கள் இங்கே.

கூகுள் I/O நிகழ்வு.. என்னென்ன அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள்?

தங்களுடைய வருடாந்திர I/O நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது கூகுள். இரண்டு மணி நேரம் நீடித்த அந்த நிகழ்வில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள்.

I/O நிகழ்வுக்கு முன்பே இணையத்தில் கசிந்த கூகுள் AI அப்டேட்ஸ்!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று இரவு நடைபெறவிருக்கிறது கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு.

பிக்ஸல் 7a வெளியீடு.. சலுகை விலையில் 'கூகுள் பிக்ஸல் 6a'!

கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு இன்று நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்குத் தொடங்குகிறது அந்த நிகழ்வு.

கூகுளின் 'Chrome'-க்குப் போட்டியாக புதிய இணைய உலாவி 'உலா' - Zohoவின் அறிமுகம்!

கூகுள் க்ரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ் உள்ளிட்ட இணைய உலாவிகள் (Web Browsers) சந்தைப் பங்குக்காக போட்டியிட்டுக் கொண்டிருக்க தங்களுடைய புதிய இணைய உலாவியாக 'உலா'-வை (Ulaa) அறிமுகம் செய்திருக்கிறது இந்திய மென்பொருள் நிறுவனமான ஸோஹோ (Zoho).

கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு.. என்ன எதிர்பார்க்கலாம்?

ஒவ்வொரு வருடமும் தங்களுடைய மென்பொருள் மற்றும் வன்பொருளின் புதிய அப்டேட்களை தங்களுடைய வருடாந்திர I/O மாநாட்டில் கூகுள் நிறுவனம் வெளியிடும்.

AI வசதியுடன் கூடிய தேடுபொறி சேவை.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது கூகுள்! 

கடந்த சில நாட்களுக்கு முன் AI வசதியுடன் கூடிய தங்களுடைய புதிய பிங் தேடுபொறியை அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்!

புதிய தொழில்நுட்பங்கள் அல்லது விஷயங்கள் இணையத்தில் வைரலாகும் போது அதனை வைத்து மோசடி செயல்கள் அரங்கேறுவதும் அதிகரிக்கும்.

தங்களது முதல் ஃபோல்டபிள் போன்.. டீசர் வெளியிட்டது கூகுள்!

கடந்த சில மாதங்களாகவே கூகுளின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் நிறைய கசிந்து வந்தது. கூகுளின் வருடாந்திர I/O மாநாட்டில் இந்த போன் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியான நிலையில், அந்த போனின் டீசர் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது கூகுள்.

பாதுகாப்பான AI பயன்பாடு.. அமெரிக்க அதிபருடன் டெக் நிறுவன பிரதிநிதிகள் சந்திப்பு!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஜோ பைடன் சந்தித்திருக்கிறார்.

ட்விட்டர், இன்ஸ்டாகிராமைப் போலவே ஜி-மெயிலிலும் நீலநிற செக்மார்க்... அறிவித்தது கூகுள்!

முதன் முதலில் நம்பகத்தன்மையின் அடையாளமாக பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு நீலநிற செக்மார்க்கை வழங்கி வந்தது ட்விட்டர்.

சுந்தர் பிச்சையின் ஊதிய உயர்வு - அதிருப்தியடைந்த கூகுள் ஊழியர்கள் 

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகளவில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தது.

04 May 2023

ஆப்பிள்

IIT மென்பொறியாளர்களுக்காக போட்டியிட்ட சுந்தர் பிச்சை மற்றும் டிம் குக்... யார் இவர்கள்?

இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று மென்பொருள் பொறியாளர்களை ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தங்கள் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ள போட்டியிட்டிருக்கின்றன.

ட்ராக்கிங் சாதனங்களை பாதுகாப்பாக மாற்ற கூகுள் மற்றும் ஆப்பிளின் கூட்டுமுயற்சி!

பயனர்கள் தங்களுடைய பொருட்களை தொலைத்தால் எளிதாகக் கண்டறியும் வகையில் புதிய சாதனம் ஒன்றை ஆப்பிளும் கூகுளும் வெளியிட்டிருந்தன.

'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி!

'ஜெனரேட்டிவ் AI' என்ற செயற்கை நுண்ணறிவுச் சொல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இணையப் பயனர்களுக்குப் பரீட்சியம் ஆனது. ஆனால், அறிமுகமாகி சில மாதங்களிலேயே அதன் இணைய உலகில் அதன் வளர்ச்சியும், புகழும் அபரிமிதமானது.

AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்? 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி-யை இணைய உலகில் அறிமுகப்படுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம். சில மாதங்களிலேயே உலக அளவில் வைரலானது சாட்ஜிபிடி. AI குறித்து தெரியாதவர்கள் கூட சாட்ஜிபிடி-யை பயன்படுத்தத்த தொடங்கினார்கள்.

27 Apr 2023

உலகம்

ஊழியர்களுக்கு 'ஸ்நாக்ஸ்' வழங்குவதை நிறுத்திய கூகுள்! 

கடந்த ஜனவரி மாதம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது கூகுள். செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் அப்போது தெரிவித்தது.

யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்! 

உலகில் 2 பில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள் யூடியூபைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், யூடியூபின் பெயரில் புதிய ஆன்லைன் மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக எச்சரித்திருக்கிறது கூகுள்.

டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்! 

கூகுள், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் உள்ளிட்ட பெரிய டெக் நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை அமல்படுத்தும் முடிவில் இருக்கிறது பிரிட்டன்.

யூடியூப் பரிந்துரைகள் குறித்த வழக்கு.. AI சேவையையும் பாதிக்குமா? 

அமெரிக்காவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அல்லது யூடியூப், கூகுள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் பயனர்கள் பதிவிடும் பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களை வைத்து குறிப்பிட்ட டெக் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர முடியாது.

320 கோடியில் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட சொகுசு வீடு - சிறப்புகள் என்ன? 

கூகுள் நிறுவன அதிகாரியான சுந்தர் பிச்சை 31 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் கட்டப்பட்ட வீடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

24 Apr 2023

இந்தியா

இந்தியாவுக்கென புதிய 'ஆப் ஸ்டோர்'.. உருவாக்கி வரும் போன்பே! 

இந்தியாவைச் சேர்ந்த ஃபின்டெக் நிறுவனமான போன்பே இந்தியாவுக்கென தனி ஆப் ஸ்டோர் ஒன்றை வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மே மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்! 

வரும் மே மாதம் ஒன்பிளஸ், கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கின்றன. எந்தெந்த நிறுவனங்கள் என்னென்ன ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன?

"AI-யை நெறிமுறைப்படுத்துவது அவசியம்" - சுந்தர் பிச்சை! 

சாட்ஜிபிடி-யின் வரவுக்குப் பின்பு, AI தொழில்நுட்பங்கள் குறித்த விவாதங்களும், அது குறித்த கருத்துக்களும் அதிகரித்திருக்கின்றன. ஒரு சாரர் AI தொழில்நுட்பங்களால் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து சிலாகிக்கும் வேளையில், மற்றொரு தரப்பினரோ அதானால் ஏற்படும் பாதகங்கள் குறித்து எச்சரிக்கிறார்கள்.

AI வசதியுடன் கூடிய புதிய தேடுபொறி.. என்ன செய்கிறது கூகுள்?

கூகுளின் பிரதான சேவையே தேடுபொறி (Search Engine) சேவை தான்.

ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் அமேசான் - என்ன காரணம்? 

வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் அலுவலகத்திற்கு திரும்பும்படி அமேசான் அறிவித்துள்ளது.

கூகுள் மீது நடவடிக்கை.. தென் கொரிய நீதிமன்றம் உத்தரவு! 

தென் கொரிய பனர்களின் தகவல்களை கூகுள் எப்படி பயன்படுத்திறது அல்லது கையாளுகிறது என்கிற தகவலை கூகுள் நிறுவனம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது அந்நாட்டின் உச்சநீதிமன்றம்.