ஆண்ட்ராய்டு 14-ன் 2-வது பீட்டா வெர்ஷனை வெளியிட்டது கூகுள்.. அப்டேட் செய்து எப்படி?
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் இரண்டாவது பீட்டா அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது கூகுள். முதல் பீட்டா அப்டேட்டை பிக்ஸல் பயனாளர்களுக்கு மட்டும் வெளியிட்ட நிலையில், இந்த இரண்டாவது பீட்டா அப்டேட்டை குறிப்பிட்ட மாடல்களுக்கும் சேர்த்து பரவலாக வெளியிட்டிருக்கிறது கூகுள். புதிய ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் சில புதிய வசதிகளை கூகுள் அளித்திருக்கும். எனினும், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இருந்து பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. எந்தெந்த போன்களுக்கு? பிக்ஸல் மொபைல்கள் தவிர்த்து விவோ X90 ப்ரோ, ஐகூ 11, நத்திங் போன்(1), ஓப்போ ஃபைண்டு N2 சீரிஸ், ஒன்பிளஸ் 11, டெக்னோ கேமன் 20 சீரிஸ், ரியல்மீ GT2 ப்ரோ, ஷாவ்மி 13, ஷாவ்மி 13 ப்ரோ மற்றும் ஷாவ்மி 12T.
எப்படிப் பதிவிறக்கம் செய்வது?
பிக்ஸல் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் ஆண்ட்ராய்டு டெவலப்பர் தளத்திற்குச் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம். பிற நிறுவன ஸ்மார்ட்போன் பயனர்கள், அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணைப்பக்கத்திற்குச் சென்று அப்டேட் குறித்த அறிவிப்பையும், அப்டேட்டையும் பெறலாம். பதிவிறக்கம் செய்வதற்கு முன் அந்தப் பக்கத்தில் அது குறித்து கொடுத்திருக்கும் தகவல்களை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளவும். எப்போது வெளியாகும்? இந்தப் புதிய ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை வரும் ஜூன் மாதம் முதலில் டெவலப்பர்களுக்கும், அதனைத் தொடர்ந்து சோதனைகளுக்குப் பிறகு நிலையான வெர்ஷனை அனைத்துப் பயனர்களின் பயன்பாட்டிற்கும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்படாத நிலையில், ஆக்ஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.