
சுந்தர் பிச்சையின் ஊதிய உயர்வு - அதிருப்தியடைந்த கூகுள் ஊழியர்கள்
செய்தி முன்னோட்டம்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகளவில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தது.
இதனிடையே, கடந்த ஆண்டு சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட சம்பளம் ஆனது, சாதாரண பணியாளர்களுக்கும், தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் இடையிலான இமாலய அளவிலான ஊதிய முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என பணியாளர் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும், சுந்தர் பிச்சைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 22.6 கோடி டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,850 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.
சுந்தர் பிச்சை
ஆட்குறைப்பு மத்தியில் சுந்தர் பிச்சையின் ஊதிய உயர்வு - கொந்தளிக்கும் ஊழியர்கள்
இவை சராசரி ஊழியரின் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகமாகும். CNBC அறிக்கையின்படி நிறுவனம் செலவுகளைக் குறைத்தாலும், சுந்தர் பிச்சை சம்பளத்தை உயர்த்தியதாக ஊழியர்கள் புகார்களை தெரிவித்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனர் டிம் குக் 40% ஊதியத்தை குறைத்துக்கொண்டார். அதேப்போல் ஜூம் நிறுவனர் எரிக் யுவான் 98% ஊதிய குறைப்பை எடுத்துக்கொண்டார். ஆனால் சுந்தர் பிச்சை இதனை செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.