
கூகுள் மீது நடவடிக்கை.. தென் கொரிய நீதிமன்றம் உத்தரவு!
செய்தி முன்னோட்டம்
தென் கொரிய பனர்களின் தகவல்களை கூகுள் எப்படி பயன்படுத்திறது அல்லது கையாளுகிறது என்கிற தகவலை கூகுள் நிறுவனம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது அந்நாட்டின் உச்சநீதிமன்றம்.
2014-ல் கூகுள் தென் கொரிய பயனர்களின் தகவல்களை எப்படி பயன்படுத்துகிறது என்பதை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நான்கு வாதிகள் இணைந்து தென் கொரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும், தென் கொரிய பயனர்களின் தகவல்களை அமெரிக்காவைச் சேர்ந்த உளவு அமைப்பான PRISM உடன் கூகுள் பகிர்ந்து கொள்வதாகவும் தங்கள் மனுவில் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
"உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டிருப்பது குறித்து யோசனை செய்து வருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது கூகுள்.
தொழில்நுட்ப நிறுவனங்கள்
அமெரிக்க நிறுவனங்களின் மீதான நடவடிக்கைகள்:
சந்தையில் தங்களுடைய ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காமிற்கு 761.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்திருந்தது தென் கொரிய நீதிமன்றம்.
அந்த தீர்ப்பையே மீண்டும் வழங்கியிருக்கிறது அந்நாட்டு உச்சநீதிமன்றம்.
தங்கள் போட்டியாளரின் தளத்தில் மொபைல் கேம்களை வெளியிட தடுத்ததாகக் கூறிய குற்றச்சாட்டின் மீது கூகுள் நிறுவனத்திற்கு 31.88 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்திருக்கிறது தென்கொரியா.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் அனைத்தும் சந்தையில் நியாயமான வர்த்தக முறைகளை உறுதி செய்வதற்காகவே எடுக்கப்பட்டிருக்கின்றன என தெரிவித்திருக்கிறது கொரியா ஃபேர் ட்ரேடு கமிஷன் (Korea Fair Trade Commission).