யூடியூப் பரிந்துரைகள் குறித்த வழக்கு.. AI சேவையையும் பாதிக்குமா?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அல்லது யூடியூப், கூகுள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் பயனர்கள் பதிவிடும் பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களை வைத்து குறிப்பிட்ட டெக் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர முடியாது.
செக்ஷன் 230-யானது பயனர்கள் பதிவிடும் உள்ளடக்கங்களில் இருந்து டெக் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் இருக்கிறது.
ஆனால், இதே சட்டத்தைப் பயன்படுத்தி டெக் நிறுவனங்கள் தாங்களே உருவாக்கிய ஒரு வசதியில் இருந்து தப்ப முடியுமா?
யூடியூபில் நமக்குக் காட்டப்படும் வீடியோ பரிந்துரைகளை வைத்து அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர முடியுமா என்ற வழக்கின் தீர்ப்பை வரும் ஜூன் மாதம் வழங்கவிருக்கிறது அமெரிக்க உச்சநீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பு இனி வரும் AI சார்ந்த சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கப்போகிறது.
யூடியப்
AI-க்கும் பொருந்துமா?
யூடியூபில் நமக்குக் காட்டப்படும் பரிந்துரைகளை அதன் அல்கரிதமே தீர்மானிக்கிறது. யூடியூபில் தீவிரவாதம் குறித்த வீடியோ ஒன்று பரிந்துரையில் காட்டப்பட்டது தொடர்பாக அந்நிறுவத்தின் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
பயனர்கள் பதிவிடும் உள்ளடக்கங்களும், அல்கரிதம் மற்றும் AI-யும் ஒன்றல்ல. பயனர்களின் உள்ளடக்கங்களை டெக் நிறுவனங்கள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அல்கரிதமை முழுமையாக குறிப்பிட்ட நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன அல்லது அவற்றை உருவாக்கியதே அந்த நிறுவனங்கள் தான்.
ஆனால், இதில் AI-க்கள் உருவாக்கும் கருத்துக்களை நீதிமன்றம் எந்தவகையில் எடுத்துக் கொள்ளும் என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.