
சென்னையில் உள்ள கூகுள் CEO சுந்தர் பிச்சையின் வீடு சினிமா நடிகருக்கு விற்கப்பட்டது!
செய்தி முன்னோட்டம்
கூகிள் CEO சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள தனது பழைய வீட்டை, தமிழ் சினிமாவின் நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் என்பவருக்கு விற்றுள்ளார்.
இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து மணிகண்டன் பேசியபோது "சுந்தர் பிச்சையிடம் உலகத்தில் பெரிய பணக்காரராக இருந்தாலும், மற்றவர்களிடம் பணிவாகவும், கனிவாகவும் இருக்கிறார். அதற்கு காரணம், அவரது பெற்றோர்கள் வளர்த்த விதம் தான் காரணம்" என்று கூறினார்.
"சுந்தரின் பெற்றோர்கள் மிகவும் நல்லவர்களாகவும், கனிவாகவும் இருக்கிறார்கள்" என்றார் மணிகண்டன்.
மணிகண்டன் கோலிவுட்டில் சிறு வேடங்களில் நடித்து வருபவர். அதோடு சைடு பிசினஸ்சாக, நிறைய வீடுகளை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
Google CEO Sundar Pichai
சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்க முடிவு
இது வரை, சுமார் 300 வீடுகளை கட்டி விற்றுளார் என செய்திகள் கூறுகின்றன. இதனிடையே, மணிகண்டன், சுந்தர் பிச்சை தனது வீட்டை விற்பதாக அறிந்தார்.
சென்னை மக்களிடையே, 'நம்ம ஊர் பையன்' என அறியப்பட்ட சுந்தர் பிச்சையின் வீட்டை எப்படியாவது வாங்கிவிட முடிவு செய்தார் அவர்.
அதற்கான நடவடிக்கையில் இறங்கி, இறுதியில், பெரிய தொகை கொடுத்து அந்த வீட்டை வாங்கி உள்ளார் எனவும் தெரிய வருகிறது.
சுந்தர் பிச்சை நம் நாட்டிற்கு கிடைத்த பெருமை என்றும் அவர் வாழ்ந்த வீட்டை வாங்குவது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் மணிகண்டன் தெரிவித்தார்.
சுந்தர் பிச்சை தந்து பள்ளிப்படிப்பு வரை இந்த வீட்டில் இருந்து தான் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.