கூகுள் I/O நிகழ்வு.. AI சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன?
கூகுளின் I/O நிகழ்வில் பல புதிய AI வசதிகள் மற்றும் AI கருவிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள். அவற்றின் அறிமுகங்கள் இங்கே. AI ஸ்னாப்ஷாட்: தங்கள் தேடுபொறி சேவையில் AI வசதியுடன் கூடிய ஸ்னாப்ஷாட் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். Search Generative Experience என்ற புதிய வசதியை பயன்படுத்த நீங்கள் ஒப்புக்கொள்வதன் மூலம், கூகுள் தேடுபொறியில் உங்கள் தேடலுக்கு தொடர்புடைய AI-யால் உருவாக்கப்பட்ட பதில் ஒன்றை கூகுள் காட்டும். இது பயனர்களின் தேடலுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறது கூகுள். போட்டோ எடிட்டர்: கூகுள் போட்டோஸ் சேவையில் AI வசதியுடன் கூடிய போட்டோ எடிட்டர் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது கூகுள்.
ஆண்ட்ராய்டில் AI:
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் AI வசதியுடன் கூடிய சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது கூகுள். நமக்கு வரும் குறுஞ்செய்திக்கு எப்படி ரிப்ளை செய்யலாம் என சில பதில்களை AI நமக்குப் பரிந்துரை செய்யுமாம். டெக்ஸ்ட்-டூ-இமேஜ் வகையில் நமது வால்பேப்பரை AI மூலம் உருவாக்கிக் கொள்ளும் வசதியை அளிக்கவிருக்கிறது கூகுள். நம்மிடம் இருக்கும் வால்பேப்பரை AI மூலம் கஸ்டமைஸ் செய்யும் வசதியை பிக்ஸல் போன்களில் மட்டும் அளிக்கவிருக்கிறது. வொர்க்ஸ்பேஸ் AI கருவிகள்: கூகுளின் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைட்ஸ் மற்றும் ஜிமெயில் ஆகிய சேவைகளில் நமது பயன்பாட்டை எளிமையாக்கும் வகையில் பல புதிய கருவிகளை சோதனை செய்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். நாம் சுமையாகக் கருதும் வேலைகளை இந்த AI கருவிகள் எளிமைப்படுத்திவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.