I/O நிகழ்வுக்கு முன்பே இணையத்தில் கசிந்த கூகுள் AI அப்டேட்ஸ்!
செய்தி முன்னோட்டம்
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று இரவு நடைபெறவிருக்கிறது கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு.
இந்த நிகழ்வில் பல்வேறு புதிய மின்சாதனங்கள் மற்றும் கூகுள் மேம்படுத்தி வரும் செயற்கை நுண்ணிறிவுத் தொழில்நுட்பங்கள் குறித்த அறிவிப்புகளை அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெளியீட்டுக்கு முன்பே அதன் AI தொழில்நுட்ப மேம்பாடு குறித்த சில அப்டேட்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன.
அதன்படி பார்டு AI-யின் பல வெர்ஷன்களை கூகுள் அறிமுகப்படுத்தவிருக்கிறதாம். பிக் பார்டு, ஜெயன்ட் பார்டு மற்றும் மல்ட்டி பார்டு என பல வெர்ஷன்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வெர்ஷனும் அதற்கே உரிய தனித்துவமான செயல்பாட்டைக் கொண்டிருக்குமாம். அதேபோல் கூகுளின் வொர்க்ஸ்பேஸ் மற்றும் பால்ம்-2 (PaLM-2) குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
கூகுள்
கூகுளின் புதிய அப்டேட்கள்:
AI வசதியுடன் கூடிய வொர்க்ஸ்பேஸை இன்றைய I/O நிகழ்வில் கூகுள் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதனால் கூகுளின் ஸ்லைடு மற்றும் மீட் சேவைகளில் இமேஜ் ஜெனரேஷன் உள்ளிட்ட புதிய வசதிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
PaLM-2 என்ற புதிய லாங்குவேஜ் மாடலையும் கூகுள் இன்றைய நிகழ்வில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இது சாட்ஜிபிடி போன்ற AI-க்கள் பயன்படுத்தும் லாங்குவேஜ் மாடலின் அடுத்த தலைமுறை எனக் குறிப்பிடப்படுகிறது.
மேலும், சாட்பாட்களின் உரையாடல் திறனை இது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கோடிங், கணிதம் மற்றும் கிரியேட்டிவ் ரைட்டிங் உள்ளிட்ட திறன்களையும் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர இன்னும் பல AI கருவிகளையும் கூகுள் தங்களுடைய I/O நிகழ்வில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.