கூகுளின் பிக்சல் டேப்லட்டை விட சிறப்பான வசதிகளைக் கொண்டிருக்கிறது ஒன்பிளஸ் பேடு, ஏன்?
கடந்த வாரம் நடைபெற்ற I/O நிகழ்வில் தங்களுடைய புதிய பிக்சல் டேப்லட்டை அறிமுகம் செய்தது கூகுள். கடந்த மாதம் தான் தங்களுடைய புதிய டேப்லட்டையும் அறிமுகம் செய்தது ஒன்பிளஸ். இரண்டில் கூகுளின் பிக்சல் டேப்லட்டை விட ஒன்பிளஸ் பேடு அதிக வசதிகளைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஏன்? கூகுள் தங்களுடைய புதிய டேப்லட்டை 16:9 அஸ்பெக்ட் ரேஷியோவில் வெளியிட்டிருக்கிறது. ஒன்பிளஸ் பேடானது 7:5 அஸ்பெக்ட் ரேஷியோவைக் கொண்டிருக்கிறது. இது இ-புக் பயனர்களுக்கு மிகவும் ஏதுவாக இருக்கும். பிக்சலில் 10.95 இன்ச் QHD+ (1600x2560) LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்க, ஒன்பிளஸ் பேடில் டால்பி விஷன் வசதியுடன் 11.61 இன்ச் 2.8K (2000x2800) LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது.
பயனர்களுக்கு ஏதுவான வசதிகளைக் கொண்ட ஒன்பிளஸ் பேடு:
பிக்சலின் 8MP ரியர் கேமராவில் 30fps-ல் 1080p வீடியோக்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆனால், ஒன்பிளஸ் பேடின் 13MP ரியர் கேமராவில் 30fps-ல் 4K வீடியோக்களை பதிவு செய்ய முடியும். டென்சார் G2 சிப்புடன், அதிகபட்சமாக 8GB/256GB கான்ஃபிகரேஷனில் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகியிருக்கிறது பிக்சல் டேப்லட். ஆனால், ஒன்பிளஸ் பேடில், டைமன்சிட்டி 9000 ப்ராசஸர், 12GB/256GB கான்ஃபிகரேஷனோடு 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிக்சல் டேப்லட்டின் டாப் மாடலானது இந்திய மதிப்பில் ரூ.49,300 விலையில் வெளியாகியிருகும் நிலையில், ஒன்பிளஸ் பேடின் டாப் மாடலானது ரூ39,999 விலைக்கே விற்பனையில் இருக்கிறது. பிச்கல் டேப்லட்டை விட பல வசதிகளில் ஒருபடி மேலேயே இருக்கிறது ஒன்பிளஸ் பேடு.