
ட்விட்டர், இன்ஸ்டாகிராமைப் போலவே ஜி-மெயிலிலும் நீலநிற செக்மார்க்... அறிவித்தது கூகுள்!
செய்தி முன்னோட்டம்
முதன் முதலில் நம்பகத்தன்மையின் அடையாளமாக பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு நீலநிற செக்மார்க்கை வழங்கி வந்தது ட்விட்டர்.
ட்விட்டரைத் தொடர்ந்து ஃபேஸ்புக் மெற்றும் இன்ஸ்டாகிராமிலும் பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் கணக்குகளுக்கு, அவை தான் உண்மையான சமூக வலைத்தளக் கணக்கு என்பதைக் குறிப்பிடும் விதமாக நீலநில செக்மார்க் வழங்கப்பட்டது.
ட்விட்டரில் நீலநிற செக்மார்க்கை கட்டண வசதியாக எலான் மஸ்க் மாற்றியிருக்கும் நிலையில், கூகுள் நிறுவனம் தங்களது ஜி-மெயில் சேவையில் நீலநிற செக்மார்க் வசதியை அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
மற்ற தளங்களின் பயன்படுத்தப்படும் அதே பயன்பாட்டிற்காகவே ஜிமெயிலும் இந்த வசதியை அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
சரிபார்க்கப்பட்ட கணக்குகளில், அனுப்புவரின் பெயருக்குப் பக்கத்தில் நீல்நிற செக்மார்க் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது கூகுள்.
கூகுள்
ஜி-மெயிலில் எதற்கு நீலநிற செக்மார்க்?
சமீப காலங்களில் ஒரு நபரின் ஜி-மெயில் முகவரி போலேவே போலி முகவரிக்களில் இருந்து பயனர்களுக்கு மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் யூடியூப் நிறுவனத்தில் இருந்து அனுப்புவது போலவே, அதே மின்னஞ்சல் முகவரியில் இருந்து பயனர்களுக்கு மோசடி மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது.
மிகவும் எச்சரிக்கையான பயனர்களாலேயே கூட அது உண்மையான மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்பட்டிருக்கிறதா அல்லது போலி மின்னஞ்சல் முகவரியா எனக் கண்டறிய முடியவில்லை.
எனவே, தான் தற்போது இந்தப் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள். ஆனால், நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கு மட்டும் இந்த நீலநிற செக்மார்க் வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது கூகுள்.
மேலும், இந்த நீலநிற செக்மார்க்கை வழங்குவதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.