Page Loader
Ad blocker-களை தடை செய்யத் திட்டமிட்டு வரும் யூடியூப் நிறுவனம்!
Ad blocker-களை தடை செய்யத் திட்டமிட்டு வரும் யூடியூப்

Ad blocker-களை தடை செய்யத் திட்டமிட்டு வரும் யூடியூப் நிறுவனம்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 12, 2023
04:26 pm

செய்தி முன்னோட்டம்

பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும், மேலும் பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது கூகுளின் யூடியூப் தளம். இவைகளுக்கு அடித்தளமாக இருப்பது விளம்பரங்களே. ஆனால், அந்த விளம்பரங்களைத் தடை செய்யும் கருவிகள் (Ad Blockers) இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைத் தற்போது தடை செய்யத் திட்டமிட்டிருக்கிறது யூடியூப் நிறுவனம். ஆட் ப்ளாக்கர்களைப் பயன்படுத்துவதன் மூலம் விளம்பரங்களைத் தவிர்த்துவிட்டு காணொளியை மட்டும் பயனர்கள் பார்க்க முடியும். இது விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமல்லாது யூடியூபின் சந்தாதாரர் முறையில் கிடைக்கும் வருவாயையும் சேர்த்து பாதிக்கும். எனவே, இந்த ஆட் ப்ளாக்கர்களை யூடியூப் தளத்தில் தடை செய்யும் வசதியை தற்போது சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம்.

யூடியூப்

ப்ரீமியம் வசதி: 

விளம்பரங்கள் இல்லாமல் காணொளிகளைக் கண்டுகளிக்க ப்ரீமியம் வசதியை அந்நிறுவனமே வழங்கி வருகிறது. 2022-ம் ஆண்டில் 80 மில்லியன் ப்ரீமியம் சந்தாதாரர்கள் அளவை எட்டியிருக்கிறது யூடியூப். இந்தப் ப்ரீமியம் வசதியை இன்னும் பல மில்லியன் பயனாளர்களை பயன்படுத்த வைக்க பல புதிய திட்டங்களைத் தீட்டியிருக்கிறது யூடியூர். அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆட் ப்ளாக்கர்களை யூடியூப் தளத்தில் தடை செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தவிருக்கிறது. ஆட் ப்ளாக்கர்களைப் பயன்படுத்தும் பயாளர்களுக்கு தற்போது பாப்-அப் ஒன்று தோன்றுகிறதாம். அதில் யூடியூபில் விளப்ரங்களை அனுமதிக்க வேண்டும் அல்லது யூடியூப் ப்ரீமியம் வசதிக்கு சந்தா செய்ய வேண்டும் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படுவதாக இணையத்தில் ஒரு ஸ்கிரீன்ஷாட் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த திட்டம் சோதனை முறையில் இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.