மே மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்!
வரும் மே மாதம் ஒன்பிளஸ், கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கின்றன. எந்தெந்த நிறுவனங்கள் என்னென்ன ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன? ரியல்மீ 11 ப்ரோ & 11 ப்ரோ+: இந்தியாவில் 11 ப்ரோ மற்றும் 11 ப்ரோ+ ஆகிய இரண்டு மிட்ரேஞ்சு மொபைல்களை வெளியிடவிருப்பதை ஏற்கனவே உறுதி செய்திருக்கிறது ரியல்மீ. டைமன்சிட்டி 7000 சிப்செட், 200 MP கேமரா, 100W ஃபாஸ்ச் சார்ஜிங் என அதிரடி வசதிகளுடன் இந்த மொபைல்களை வெளியிடவிருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு 3: இந்த மொபைலை கடந்தாண்டே வெளியிடத் திட்டமிட்டிருந்தது ஒன்பிளஸ். ஆனால், கடந்தாண்டு சின்ன அப்கிரேடுடன் நார்டு 2T-யை வெளியிட்டது. தற்போது நார்டு 2-வின் முழுமையான அப்டேட்டட் வெர்ஷனாக இதனனை வெளியிடவிருக்கிறது.
கூகுள் பிக்ஸல் 7a & பிக்ஸல் ஃபோல்டு:
மே 10-ம் தேதி தங்களது வருடாந்திர I/O மாநாட்டை நடத்தவிருக்கிறது கூகுள். அந்த நிகழ்வில் இந்த இரண்டு மொபைல்களையும் அந்நிறுவனம் வெளியிடும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. 6a-வின் அப்கிரேடட் வெர்ஷனாக 7a இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை விட கொஞ்சம் பெரிய பேட்டரி, ஃப்ளாக்ஷிப் சிப்செட், சிறந்த ரியர் கேமரா செட்அப் என எல்லாவற்றிலும் ஒரு சின்ன அப்கிரேடை எதிர்பார்க்கலாம். சந்தையில் ஏற்கனவே சில நிறுவனங்கள் தங்களது ஃபோல்டபிள் போன்களை வெளியிட்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது புதிதாக இணையவிருக்கிறது கூகுள். தங்களது ஃப்ளாக்ஷிப் டென்சார் G2 சிப்செட்டுடனும் 7.6 இன்ச் ஸ்க்ரீனுடனும் இந்த மொபைல் வெளியாகலாம் எனத் தெரிகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலான விலையில் இந்த போனை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது கூகுள்.