ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் அமேசான் - என்ன காரணம்?
செய்தி முன்னோட்டம்
வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் அலுவலகத்திற்கு திரும்பும்படி அமேசான் அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் தொழில்நுட்பம் மந்தநிலை காரணமாக 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தொடர்ந்து 9,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து இருந்தது.
அமேசான் மட்டுமின்றி பல முன்னணி நிறுவனங்களான கூகுள், மெட்டா, ட்விட்டர் உட்பட பல முன்னணி டெக் நிறுவனங்கள் தங்களின் செலவீனங்களை குறைக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்தது.
இந்நிலையில், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி பங்குதாரர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அமேசான் நிறுவனம்
ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும் - அமேசான் நிறுவனர் கடிதம்
அதில், ஊழியர்கள் சிறந்த முடிவுகளை அடைய விரும்பினால் வீட்டிலிருந்து வேலை செய்வது சிறந்த அணுகுமுறை அல்ல.
பல சிறந்த அமேசான் கண்டுபிடிப்புகள், ஒயிட்போர்டில் யோசனைகள் மூலம் வேலை செய்பவர்களிடமிருந்தோ, அல்லது மீட்டிங்கில் இருந்து திரும்பும் போது உரையாடலைத் தொடருவதிலிருந்தோ, அல்லது அலுவலகத்திற்குச் செல்வதிலிருந்தோ தங்கள் திருப்புமுனைத் தருணங்களைப் பெற்றுள்ளன.
ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது அலுவலகத்திற்கு வரவேண்டும். அடுத்த மாதம் மே மாதம் முதல் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.