பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம்
சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளுக்கு புளூ டிக் பயனாளர்களுக்கு கட்டண சலுகையை அந்நிறுவனம் ஏற்கனவே நிர்ணயித்து இருந்தது. அதன் படி, இப்போது புளூ டிக் சந்தா கட்டணத்தை வெளியிட்டுள்ளது. இதனிடையே ஸ்மார்ட்போனின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவற்கான மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட புளூ டிக் சந்தா கட்டணமும், பேஸ்புக்கின் இணையத்திற்கான கட்டணமும் வெளியாகியுள்ளது. இந்த புளூ டிக் பெற வேண்டும் என்றால் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். இதற்கான சரியான ஆவணங்கள் புகைப்படத்தை சமர்பிக்க வேண்டும். புளூ டிக் பெற about.meta.com/technologies/meta-verified என்ற பக்கத்திற்கு சென்று பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமா என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் புளூ டிக் கட்டணத்தை வெளியிட்டது மெட்டா
அதில் கேட்கப்படும் சரியான விவரங்களை கொடுக்க வேண்டும். கட்டண விபரங்கள் மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட திட்டத்திற்கான மொபைல் சந்தா பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு மாத கட்டணமாக ரூ.1,450 விலையை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அதுவே பேஸ்புக்கின் இணையத்தள சந்தா கட்டணமாக ரூ.1,099 விலையை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும். இவை இந்திய பயன்பாட்டளர்களுக்கும் பொருந்தும் எனக்கூறியுள்ளது. மேலும், ட்விட்டர் உடன் இக்கட்டணத்தை ஒப்பிட்டால், ட்விட்டருக்கு மாதம் ரூ.900 தான் வசூலிக்கப்படுகிறது. அதுவே இணையத்தள பயன்பாட்டு ட்விட்டருக்கு ரூ.650 தான் செலுத்த வேண்டும். எனவே பயன்பாட்டாளர்கள் மெட்டாவின் விலை அதிகம் எனக்கூறி வருகின்றனர்.