மெட்டாவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட இந்தியரின் உருக்கம்!
செய்தி முன்னோட்டம்
உலகளவில் டெக் நிறுவனங்கள் பணிநீக்கத்தை தொடர்ந்து வரும் நிலையில், மெட்டா பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஃபோன்பே நிறுவனத்தில் வேலை கிடைத்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை பற்றி LinkedIn பதிவிட்டுள்ளார்.
மெட்டா நிறுவனம் கடந்த ஆண்ட்டின் போது 11 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்து இருந்தது. அதில் பல இந்திய ஊழியர்களும் அடங்கும்.
இந்நிலையில், அதில் பாதிக்கப்பட்ட ஒரு இந்திய ஊழியரான விஸ்வஜீத் ஜா பணிக்காக இந்தியாவில் இருந்து கனடா சென்றுள்ளார்.
மெட்டா பணிநீக்கம்
மெட்டாவில் இருந்து வெளியேறி இருந்த இந்திய ஊழியரின் கண்ணீர் பதிவு
அவர் வெளியிட்ட பதிவில், நான்கு மாதம் பின் போன்பே நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக தனது பதவியை தொடங்கியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மெட்டாவால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் வேலைக் கிடைக்கவில்லை, பல ஊழியர்கள் இரண்டாம் கட்ட பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பலரும் இன்னும் வேலைக் கிடைக்காமல் தடுமாறியும் வருகின்றனர் எனத்தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பல நிறுவனங்கள் பணிநீக்கத்தை தொடர்ந்தாலும், மெட்டா நிறுவனத்தின் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் பணியாளர் எண்ணிக்கையில் இதுவரை நிரப்பப்படாத 5000 இடங்களையும் சேர்த்து 10,000 பணியிடங்களையும் குறைக்க உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.