சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 2
செய்தி முன்னோட்டம்
சாட்ஜிபிடியில் இல்லாத என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது பார்டு? பார்க்கலாம்.
ப்ளக்இன்-கள்:
ஓபன்ஏஐ-யைப் போலவே பல ப்ளக்இன்-களை பார்டுடன் சேர்த்தே வெளியிட்டிருக்கிறது கூகுள். ஆனால், சாட்ஜிபிடியில் ப்ளக்இன் வசதியைப் பயன்படுத்த மாதம் $20 சந்தா செலுத்த வேண்டும். பார்டில் அவற்றை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
குரல் வழி உள்ளீடு:
பார்டிடம் குரல் வழியாகவும் நாம் கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்டு பதில் பெறலாம். ஆனால், சாட்ஜிபிடி அந்த வசதி இல்லை.
பிற தளங்களுக்கு பகிரும் வசதி:
பார்டின் பதில்களை Docs-க்கோ அல்லது ஜிமெயிலுக்கோ பகிர முடியும். ஒவ்வொரு பதிலுக்கும் கீழே இதற்கான கருவி வழங்கப்பட்டிருக்கும். ஆனால், சாட்ஜிபிடியில் இந்த வசதி வேண்டும் என்றால் எக்டென்ஷன்களைத் தான் பயன்படுத்த வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு
தேடலை எளிமையாக்கும்:
பார்டு அளிக்கும் பதில்களுக்கு கீழே கூகுளில் அது குறித்த தகவல்களை தேடுவதற்கான ஆப்ஷன் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கும். இது நமது தேடலை எளிமையாக்கி, விரைவாக நமக்குத் தேவையான தகவல்களை தேட வழிசெய்யும்.
ஜிமெயிலுடன் ஒருங்கிணைப்பு:
பார்டை ஜிமெயிலுடன் ஒருங்கிணைக்கவிருக்கிறது கூகுள். இதன் மூலம் ஜிமெயிலை பயன்படுத்தும் அனுபவமே முழுமையாக மாறிவிடும். நமக்குத் தேவையான மெயிலை முழுவதுமாக நாமே டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட தகவல்களைக் கொடுத்துவிட்டால் பார்டே நமக்கான மெயிலை டைப் செய்துவிடும்.
கோடிங்கிற்கு பார்டு:
20-க்கும் மேற்பட்ட கோடிங் லாங்குவேஜ் சப்போர்ட்டைக் கொண்டிருக்கிறது பார்டு. இதன் மூலம் கோடை உருவாக்க வேண்டும், விளக்கமளிக்க வேண்டுமா அல்லது பிழைகளைக் கண்டறிய வேண்டுமா? அனைத்திற்கும் தயாராக இருக்கிறது பார்டு.