'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி!
'ஜெனரேட்டிவ் AI' என்ற செயற்கை நுண்ணறிவுச் சொல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இணையப் பயனர்களுக்குப் பரீட்சியம் ஆனது. ஆனால், அறிமுகமாகி சில மாதங்களிலேயே அதன் இணைய உலகில் அதன் வளர்ச்சியும், புகழும் அபரிமிதமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி என்ற தங்களது AI சாட்பாட்டை வெளியிட்டது ஓபன்ஏஐ நிறுவனம். வெளியாக சில மாதங்களிலேயே அதற்கு பயனர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பையடுத்து மைக்ரோசாப்ட் அந்நிறுவனத்துடன் கைகோர்க்க, கூகுள் தங்களுடைய ஏஐ சாட்பாட்டான பார்டை வெளியிட்டது. கூகுள் அவசர அவசரமாக போட்டிக்காக ஒரு சாட்பாட்டை வெளியிடுவதார பலரும் கூறிய நிலையில், கூகுள் இதற்கான திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ப்ளேக் லெமாய்ன்.
முன்னாள் ஊழியரின் பேட்டி:
2021-லேயே பார்டு சாட்பாட்டை உருவாக்கத் தொடங்கிவிட்டது கூகுள். ஆனால், அதற்கு அப்போடு பார்டு எனப் பெயர் வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் ப்ளேக். 2022 செப்டம்பரிலேயே அந்த AI சாட்பாட்டை கூகுள் வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும், தான் பாதுகாப்பு காரணங்கள் குறித்து எச்சரிக்கை செய்ததால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டதாவும் தெரிவித்துள்ளார் அவர். கூகுள் உருவாக்கி வரும் AI-யானது மனிதர்களைப் போலவே சிந்திப்பதாக கடந்த ஆண்டு ப்ளேக் லெமாய்ன் தகவலை வெளியிட்டதையடுத்து அவரை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. AI சாட்பாட்டை உருவாக்கும் மறஅறும திட்டத்தில் கூகுள் தெளிவாக ஒரு பாதை வகுத்து வைத்திருக்கிறது. சாட்ஜிபிடி-யின் வரவு அதனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை, என பேட்டியில் தெரிவித்துள்ளார் ப்ளேக்.