
பாதுகாப்பான AI பயன்பாடு.. அமெரிக்க அதிபருடன் டெக் நிறுவன பிரதிநிதிகள் சந்திப்பு!
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஜோ பைடன் சந்தித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு சாட்ஜிபிடியின் வரவுக்குப் பின்பு ஜெனரேட்டிவ் AI-க்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. அதனால் கிடைக்கும் வாய்ப்புகளைக் கடந்து, பாதிப்புகள் குறித்து உரையாடுவது அவசியம்.
அமெரிக்கா துணை அதிபரான கமலா ஹாரிஸ், ஜோ பைடனும் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா, ஆல்ஃபபெட்டின் சுந்தர் பிச்சை, ஓபன்ஏஐயின் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஆன்த்ரோபிக்ஸின் டேரியோ அமோடெய் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.
AI தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது எப்படி என்பது குறித்து உரையாடல் நிகழ்ந்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு
பாதுகாப்பான AI பயன்பாடு:
AI தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயன்பாடு குறித்த விஷயத்தில் அரசும் டெக் நிறுவனங்களும் ஒரே இலக்கையே கொண்டிருப்பதாக ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
டெக் நிறுவனங்கள் தங்களுடைய AI தொழில்நுட்பங்களின் தன்மை குறித்து வெளிப்படைத் தன்மையுடன் இருப்பது அவசியம். அப்போது தான் எந்த வகையில் பாதுகாப்பாக அதனை அனுகுவது என்பது குறித்து முடிவெடுக்க முடியும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
AI தொழில்நுட்ப மேம்பாட்டில் முன்னணியில் இருக்கும் ஆனத்ரோபிக், கூகுள், ஓபன்ஏஐ மற்றும் ஸ்டெபிலிட்டி ஏஐ ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய AI தொழில்நுட்பங்களை பொது மதிப்பீடு செய்வதில் பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.