IIT மென்பொறியாளர்களுக்காக போட்டியிட்ட சுந்தர் பிச்சை மற்றும் டிம் குக்... யார் இவர்கள்?
இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று மென்பொருள் பொறியாளர்களை ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தங்கள் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ள போட்டியிட்டிருக்கின்றன. ஸ்ரீனிவாச வேங்கடாசாரி, ஆனந்த் சுக்லா மற்றும் ஸ்டீவன் பேக்கர் ஆகிய மூன்று பொறியாளர்களுக்கும் செம டிமாண்டாம். ஆப்பிளின் தேடுபொறியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு கூகுளில் இணைந்து சாட்ஜிபிடி போன்ற AI சாட்பாட்களுக்கு அடிப்படையாக இருக்கும் லாங்குவேஜ் மாடல்களை மேம்படுத்தி வருவதில் பங்காற்றி வருகின்றனர். மென்பொருள் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கவனம் பெற்றுவரும் நிலையில், அது சார்ந்த தொழில்நுட்ப திறனுடைய பணியாளர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. மேற்கூறிய மூவரையும் ஆப்பிளிலேயே இருக்குமாரு டிம் குக்கும், கூகுளில் சேருமாரு சுந்தர் பிச்சையும் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
யார் இவர்கள்?
2001-ல் கான்பூர் ஐஐடியில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற சுக்லா, அதன் பிறகு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து 12 வருடங்கள் கூகுளில் பணியாற்றிய பிறகு வெங்கடசாரி மற்றும் பேக்கருடன் சேர்ந்து லேசர்லிங்க் என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அந்நிறுவனத்தை ஆப்பிள் வாங்கவே 2018-ல் ஆப்பிளில் இணைந்திருக்கிறார்கள். 4 வருடங்களில் ஆப்பிளில் பணி செய்த பின் கடந்த நவம்பர் மாதம் கூகுளில் சேர்ந்திருக்கிறார். 1996-ல் சென்னை ஐஐடியில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டமும், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றவர் வெங்கடாசாரி. சுக்லாவைப் போலவே இவரும் முதலில் 6 வருடங்கள் கூகுளில் பணி, பின்னர் ஆப்பிளில் 4 வருடங்கள் பணி செய்ததைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் மீண்டும் கூகுளில் இணைந்திருக்கிறார்.