
இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்
செய்தி முன்னோட்டம்
பஞ்ஜா லூகா மற்றும் போஸ்னியா ஹெர்சகோவினா பல்கலைக்கழங்களின் மூத்த உதவி பேராசிரியராகவும், 'கூகுள்' நிறுவன சாப்ட்வேர் எஞ்சினியராகவும் பணியாற்றி வருபவர் லேடன் அடமோவிக்.
செர்பியா நாட்டில் செயல்பட்டு வரும் 'நம்பியோ' என்னும் தனியார் நிறுவனத்தின் நிறுவனராகவும் இவர் உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் தனது 'நம்பியோ' நிறுவனம் மூலம் உலகம் முழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு ஒன்றினை நடத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அதன்படி இந்த ஆய்வானது, பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு சூழல், முன்னதாக நடத்தப்பட்ட இதுபோன்ற ஆய்வுகளின் முடிவுகள் உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.
பட்டியல்
சந்தோஷத்தில் ஆழ்ந்த சென்னை காவல்துறை
இந்நிலையில், லேடன் அடமோவிக் மேற்கொண்ட ஆய்வு முடிவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரம் இந்தியளவில் முதல் இடத்தையும், உலகளவில் 127வது இடத்தினையும் பிடித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து இந்த தகவல் சென்னை மாநகர காவல்துறையை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், 'சென்னை மக்களை பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் தங்களை அர்ப்பணித்து பணிபுரிந்து வருகிறார்கள் என்பதை பெருமிதத்தோடு கூறி கொள்கிறேன்' என்று பேசியுள்ளார்.
இதனிடையே இந்தாண்டின் துவக்கத்தில், 'அவ்தார்' என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் சென்னை பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான நகரம் என்று 78.4 புள்ளிகள் பெற்று இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.